சேலம் விமான நிலையத்துக்கு இபிஎஸ் பெயர் வைக்கணும்..! டெல்லிக்கு பறந்த கடிதம்..! ஸ்டன் ஆன மோடி!

Published : Nov 13, 2025, 08:48 PM IST
Tamilandu

சுருக்கம்

சேலம் விமான நிலையத்துக்கு எடப்பாடி பழனிசாமி பெயர் வைக்க வேண்டும் என்று அதிமுக வழக்கறிஞர் ஏ.பி. மணிகண்டன் மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக உள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராகி வரும் நிலையில், சேலம் விமான நிலையத்துக்கு எடப்பாடி பழனிசாமி பெயரை வைக்க வேண்டும் என்று அக்கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் சேலம் ஏ.பி. மணிகண்டன் மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சேலம் விமான நிலையத்துக்கு இபிஎஸ் பெயர்

மணிகண்டன் டெல்லிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'சேலம் 1993 ஆம் ஆண்டு முதல் சிவில் விமானப் போக்குவரத்தில் இணைந்த நீண்ட வரலாற்றை கொண்டது. தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியின் மையமாக உள்ள சேலம் மற்ற மாவட்டங்களை சென்னை மற்றும் பெங்களூருவுடன் இணைக்கிறது. எஃகு தொழில்கள், ஆட்டோமொபைல் என தொழில் துறை மாவட்டமாக சேலம் விளங்கி வருகிறது. சேலத்திற்கு அண்மையில் வணிக விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டது ஒரு வரவேற்கத்தக்க விஷயமாகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

சேலத்தின் பெருமை இபிஎஸ்

மேலும் சேலம் சி.இராஜகோபாலாச்சாரி, ரங்கராஜன் குமாரமங்கலம் ஆகிய ஆளுமைகளின் தாயமாக விளங்கி வருகிறது. இதே போல் எடப்பாடி பழனிசாமி சேலத்தின் பெருமை. இபிஎஸ் அய்யா என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அவர் எடப்பாடி தொகுதிக்கும் கொண்டலாம்பட்டி தொகுதிக்கும் இடையில் அமைந்துள்ள, சேலம் விமான நிலையத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிலுவம்பாளையம் என்னும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் என்று ஏ.பி. மணிகண்டன் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

வைரலாகும் கடிதம்

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது சேலம் மற்றும் மேற்குத் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பெரும் பங்களிப்பு செய்துள்ளார். அந்த மரியாதையாக சேலம் விமான நிலையத்துக்கு இபிஎஸ் பெயர் வைப்பது பொருத்தமாகவும், மக்கள் மனதை பிரதிபலிக்கும் வகையிலும் இருக்கும் என்று ஏ.பி. மணிகண்டன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி மீம்ஸ்களுக்கு வழிவகுத்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அட! 2026 தேர்தலுக்கு இப்போதே ரெடி! நாம் தமிழர் கட்சியின் 100 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சீமான்!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!