சட்டசபையில் அதிமுக கூட்டணி கணக்கு தொடர்பாக சுவாரஸ்ய விவாதம் நடைபெற்றது. 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி புதிய கணக்கு தொடங்குவார் என கடம்பூர் ராஜு தெரிவித்தார். இதற்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் ஐ பெரியசாமி ஆகியோர் பதிலளித்தனர்.
ADMK alliance assembly debate : தமிழக சட்டசபையில் கடந்த வாரம் நடைபெற்ற நிதி நிலை அறிக்கையில் மீதான விவாதத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி அரசின் மடிக்கணினி திட்டத்தி ஒரு மடிக்கணினிக்கு 10ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. இது தரமாக இருக்குமா.? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, "மடிகணினியில் மனக்கணக்கை தங்கமணி தவறாகப் போட்டுள்ளார்.
அதிமுகவின் வேறு ஒரு கூட்டல் கணக்கை வேறு ஒரு இடத்தில் வேறு ஒருவர் போட்டு வருகிறார்கள். ஜாக்கிரதையாக இருங்கள் என கூறினார். இதனையடுத்து பதில் அளிக்கும் வகையில் பேசிய தங்கமணி, எந்த ஒரு கூட்டல் கழித்தல் கணக்கிலும் நாங்கள் ஏமாற மாட்டோம் என தெரிவித்தார்.
இரட்டை இலை நோ சான்ஸ்.! தாமரைக்கு ஓகே.! அமித்ஷாவிடம் பிடிவாதம் பிடித்த எடப்பாடி
அதிமுகவின் கூட்டணி கணக்கு
அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தங்கமணி எந்த கூட்டல் கழித்தல் கணக்கிலும் ஏமாற மாட்டோம் என்கிறார். அதிமுகவினர் ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள் என குறிப்பிட்டிருந்தார். இந்த பரபரப்பான சூழ்நிலைகளுக்கு இடையே டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். எனவே 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூட்டணி உறுதியானதாகவே கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்றும் சட்டசபையில் அதிமுக கூட்டணி கணக்கு தொடர்பாக சுவாரஸ்ய விவாதம் நடைபெற்றது. இன்றைய தினம் நடைபெற்ற ஊரகவளர்ச்சித்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு, கணக்கு கேட்டு தொடங்கிய கட்சி தான் அதிமுக. 2026ல் முடிக்க வேண்டியவர்களின் கணக்கை முடித்து புதிய கணக்கை எடப்பாடி பழனிசாமி தொடங்குவார் என தெரிவித்தார்.
கூட்டணிக்கு நோ சொன்ன விஜய்.! பாஜகவோடு இணைந்த அதிமுக- அதிர்ச்சியில் நிர்வாகிகள்
தப்பு கணக்கு போடும் அதிமுக
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு கணக்கு கேட்ட கட்சி ஆரம்பித்த நீங்கள் தற்போது தப்புக் கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என கூறினார். இதற்கு பதிலளிக்கும் வகையில், முன்னாள் அமைச்சரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான எஸ் பி வேலுமணி, அதிமுக நிறுவனர் எம் ஜி ஆர், பொதுச்செயலாளர் ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கு சரியாகத்தான் இருக்கும். கூட்டிக் கழித்து பார்த்தால் அவர் போடும் கணக்கு சரியாக வரும் என கூறினார்.
இதனையடுத்து பேசிய அமைச்சர் ஐ பெரியசாமி, கடந்த ஆட்சியின் போது தாய் திட்டத்தை கைவிட்டதன் மூலம் தாயையே அதிமுக மறந்துவிட்டது என விமர்சித்தார். இதற்கும் பதிலளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தாய் திட்டத்தை நாங்கள் நிறுத்தவில்லை. எங்களை எல்லாம் வளர்த்தெடுத்த ஜெயலலிதாவை எந்நாளும் நாங்கள் மறக்க மாட்டோம் என கூறினார்.