கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி ராமேஸ்வரத்தில் பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா தலைமையில் "என் மண் என் மக்கள்" என்ற பாதயாத்திரை துவங்கினார் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை அவர்கள்.
இந்நிலையில் நேற்று ஆகஸ்ட் 11ம் தேதி கோவில்பட்டியில் தனது பாதயாத்திரை நடத்திய அண்ணாமலை அவர்கள் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் பகுதியில் தனது நடை பயணத்தை தொடங்கினார்.
கோவில்பட்டியில் இருந்து விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு இன்று காலை அவர் வந்த பொழுது எட்டயபுரம் சாலையில் உள்ள பாரதியாரின் மணிமண்டபத்திற்கு சென்றார். பின்னர் அங்கு அமைந்துள்ள அவருடைய வீட்டுக்கு சென்று, அங்கிருந்துவற்றை பார்வையிட்டார். அதன் பிறகு பொதுமக்களிடம் பேசிய திரு. அண்ணாமலை அவர்கள் அரசியல் மாற்றம் விரைவில் வரவில்லை என்றால் விளாத்திகுளத்திற்கு என்றும் முன்னேற்றம் இருக்காது என்றார்.
"மார்க்கண்டேயன் போன்ற எம்எல்ஏக்களை விளாத்திகுளம் அப்புறப்படுத்த வேண்டும், மார்க்கண்டே எம்எல் ஏவுக்கு இன்னொரு பெயரும் இருக்கிறது, அதுதான் குட்டி செந்தில் பாலாஜி, எந்த கட்சியில் இருப்பார் என்று அவருக்கே தெரியாது. இதே எம்எல்ஏ கடந்த 2021ம் ஆண்டு செல்வி ஜெயலலிதா அவர்கள் மறைவுக்கு பிரதமர் மோடி தான் காரணம் என்று கூறினார், இதைப்பற்றி விளாத்திகுளத்தில் பேச இரண்டு வருடங்களாக காத்துக் கொண்டிருந்தேன்".
ஊழலற்ற இந்தியா உருவாக இளம் தலைமுறையினர் இதை செய்தால் போதும் - ஆளுநர் அறிவுரை
"இந்த எம்எல்ஏ மீண்டும் அதை சொன்னால் விளாத்திகுளத்தில் அவரால் கால் எடுத்து வைக்க முடியாது என்று" கடுமையாக பேசினார். ஏழை மக்களின் கண்ணீர் வியர்வை ரத்தங்களை உறிஞ்சி குளிக்க கூடிய ஜென்மங்கள் இவர்கள்" என்று கூறினார்.
"பின் முதலமைச்சர் செய்யாத சாதனைகளை செய்ததாக கூட்டங்களில் பொய் பேசுவார், சரி நாம் இங்கு கூடியிருப்பது பாரத பிரதமர் மோடி அவர்களின் 9 ஆண்டுகால ஆட்சி சிறப்பு பற்றி பேசுவதற்கு தான், முத்ரா கடன் திட்டம், செல்வமகள் சேமிப்பு திட்டம், சுகர் நிதி திட்டம் போன்ற திட்டங்களை பயன்படுத்தி தங்கள் வாழ்க்கையை முன்னேற்றிக் கொண்டு இருக்கின்றனர் விளாத்திகுளம் மக்கள்" என்று அண்ணாமலை அவர்கள் கூறினார்.
மேலும் பிரதமர் மோடி அவர்கள் தமிழக முதல்வரை போன்ற தன் குடும்பத்திற்காக சொத்து சேர்க்க விரும்பவில்லை, பொதுமக்களுக்காக உழைத்து வருகிறார். தமிழக காவல்துறை ஒரு சிறந்த காவல் துறை ஆனால் இன்று குர்காவை போல வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் மோடி கால் நகத்தில் இருக்கும் அழுக்குக்கு கூட முதலமைச்சர் ஸ்டாலின் சமன் கிடையாது" என்று அவர் பேசினார்.
"தமிழகம் மாற வேண்டும் அரசியல் மாற வேண்டும் மக்களை உயர்த்த வேண்டும் என்பதற்காக என் மண் என் மக்கள் யாத்திரை நடந்து கொண்டிருக்கிறது, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ஏவுதளம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைவதற்கு காரணம் அன்றைய திமுக அமைச்சர் மதியழகன் தான், நடக்க முடியாமல் தள்ளாடி இருவர் உதவியோடு இரண்டு மணி நேரம் தாமதமாக சென்றதாலேயே அன்று தமிழகத்திற்கு ஏவுதளம் கிடைக்கவில்லை" என்று அவர் கூறினார்.
சிலப்பதிகாரம் பற்றி பெரியார் சொன்னதென்ன? முதலில் அதை படியுங்கள் சகோதரி - மேடையில் சீரிய அண்ணாமலை!