திருச்செந்தூர் அமலிநகரில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணி தொடங்கும் வரை போராட்டம் தொடரும் என்று மீனவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அமலிநகர் மீனவர்கள் தூண்டில் வளைவு பாலம் அமைக்க வலியுறுத்தி 6-வது நாளாக கடலுக்கு செல்லாமல் குடும்பத்தினருடன் கஞ்சி காய்ச்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருச்செந்தூர் அமலிநகரில் மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, தூண்டில் வளைவு பாலம் அமைப்பதற்கு கடந்த 2022-ம் ஆண்டு சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அந்த பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மீனவர்கள் தொடர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
undefined
எனவே, உடனடியாக தூண்டில் வளைவு பாலம் அமைக்க வலியுறுத்தியும், தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் கடந்த 7ம் தேதி முதல் அமலிநகர் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தி மீனவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மனித சங்கிலி போராட்டம், கூட்டுப்பிரார்த்தனை போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டல்; மனைவி பிரசவத்திற்கு சென்ற நிலையில் இளைஞர் காம லீலை
இந்நிலையில், தங்களின் கோரிக்கையான தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணி தொடங்கும் வரை போராட்டம் தொடரும் என்று மீனவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மீனவர்களின் இந்த தொடர் போராட்டத்தால் திருச்செந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.