தூத்துக்குடி விசிக மாவட்ட செயலாளர் அறிமுக கூட்டம்; திரளான நிர்வாகிகள் பங்கேற்பு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலாளர் அறிமுக கூட்டம் கோவில்பட்டி விடுதலை சிறுத்தை கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

VCK district secretary introducing meeting in thoothukudi

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளை மறுசீராய்வு செய்து பெயர் பட்டியலை வெளியிட்டார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வடக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தை கட்சி புதிய  மாவட்டச் செயலாளர் கூட்டம் அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமையில், மாநில வழக்கறிஞர் அணி பிரிவு துணைச் செயலாளர் பெஞ்சமின் பிராங்க்ளின், முன்னிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி புதிய மாவட்டச் செயலாளர் முருகன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் கதிரேசன் அவர்கள் கட்சி நிர்வாகியிடம் அறிமுகம் செய்து கட்சிப் பொறுப்புகளை ஒப்படைத்தனர். 

Latest Videos

இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் பாஸ்டர் மோகன், விடுதலை எழுச்சி பாசறை மாநில அமைப்பாளர் விமல் வங்காளியார், மண்டல அமைப்பாளர் முரசு தமிழப்பன், மண்டல துணை செயலாளர் மோட்சம், விடுதலை இளஞ்சிறுத்தை மாவட்டச் செயலாளர் பிரபாவாளன், விடுதலைச் சிறுத்தை மாவட்ட செய்தி தொடர்பாளர் மனுவேல், மகேந்திரன், செல்வகுமார், மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

vuukle one pixel image
click me!
vuukle one pixel image