தூத்துக்குடியில் ஸ்கேட்டிங் செய்து கொண்டே 1000 மரக்கன்றுகளை வழங்கி மாணவி விழிப்புணர்வு

By Velmurugan s  |  First Published Jul 29, 2023, 5:33 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பள்ளி மாணவி மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்ற வாசகத்தை முன்னிருத்தி ஸ்கேட்டிங் செய்து கொண்டே 1000 மரக்கன்றுகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி அசத்தினார்.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசல மூர்த்தி கோவில் முன்பாக சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் சார்பாக மரம் நடுவோம் மழை பெறுவோம் என்பதை வலியுறுத்தி கோவில்பட்டி பள்ளி மாணவி ரவீணா ஸ்கேட்டிங் மூலம் பொது மக்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றது . இந்நிகழ்வை கோவில்பட்டி வட்டாட்சியர் லெனின் துவக்கி வைத்தார்.

Latest Videos

undefined

கழுகாசல மூர்த்தி  கோவில் முன்பு இருந்து தொடங்கிய  ஸ்கேட்டிங் ஆர்.சி. சர்ச் வரை 2 கிலோ மீட்டர் தூரம்  காவல் நிலையம் முன்பு தெற்கு ரத வீதி கீழ ராத வீதி மற்றும் பேரூராட்சி  பகுதிகளில் ஸ்கேட்டிங் செய்து பொதுமக்களுக்கு 1000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கினார்.

ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலம் பூவுக்கு தீபம் ஏற்றி வழிபட்ட குடும்பத்தினர்

இந்நிகழ்வில் சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக மாநில ஆலோசகர் ராஜகோபால், கழுகுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு மலையாண்டி, வசந்த், திருவள்ளுவர் கழக தலைவர் பொன்ராஜ்பாண்டியன், பொருளாளர் முருகன், சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ், கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன், ராஜ்மோகன், காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் ராமமூர்த்தி, தொழிலதிபர் நடராஜன், மாணவியின் பெற்றோர்கள், விஜயன், ரம்யா, திருக்கோயில் தலைமை எழுத்தர் மாடசாமி, உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

சிறுவர்களை தூண்டிவட்டு கல்லா கட்டிய இரும்புக்கடை உரிமையாளர்; ரூ.10 லட்சம் உதிரி பாகம் திருட்டு

click me!