காவல் நிலையத்தில் 68 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை; தலைமை காவலர் இடை நீக்கம்

By Velmurugan s  |  First Published Jul 21, 2023, 9:59 AM IST

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் துப்புரவு பணிக்கு வந்த 68 வயது மூதாட்டியை பாலியல் தொந்தரவு செய்த தலைமை காவலர் செல்வகுமார் என்பவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவு.


தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 14ம் தேதி இரவு தலைமை காவலர் செல்வகுமார் பணியில் இருந்த போது மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

அப்போது காவல் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த 68 வயது பெண்ணின் கையில் இருந்த பையை பிடுங்கி பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்துக்கு வந்த உதவி ஆய்வாளர் முருகப்பெருமாளிடம்  கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். 

அல்லேரியில் பாம்பு கடியால் தொடரும் அவலம்; சிறுமியை தொடர்ந்து மேலும் ஒருவர் பலி

இதை தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் புகார் குறித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் செல்வக்குமார்  தினமும் பணியின் போது மதுபோதையில் இருப்பது தெரிய வந்தது. மேலும் 68 வயது பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்த தலைமை காவலர் செல்வ குமாரை பணியிடை நீக்கம் செய்வதாக உத்தரவிட்டார். 

தூத்துக்குடியில் தலைமை காவலர் 68 வயது பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!