தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அமைக்கப்பட்டிருந்த இமானுவேல் சேகரன் மற்றும் வீரன் சுந்தரலிங்கம் ஆகியோரது படங்களை மர்ம நபர்கள் சேதப்படுத்திய நிலையில், விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட மீனாட்சிபட்டி பேருந்து நிறுத்தம் அருகில் வைக்கப்பட்டிருந்த தியாகி இமானுவேல் சேகரனார் மற்றும் வீரன் சுந்தரலிங்கம் ஆகியோரது திருவுருவ படங்களை நேற்று இரவு நான்கு இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசி சேதப்படுத்தியுள்ளனர்.
இந்த காட்சி அருகில் உள்ள கோவிலில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி சாலையில் திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஶ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் தலைமையில் ஆய்வாளர் அன்னராஜ் உள்ளிட்ட காவல் துறையினர் பொதுமக்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில், தியாகி இமானுவேல் சேகரனார் மற்றும் வீரன் சுந்தரலிங்கம் ஆகியோரது திருவுருவ படங்களை சேதப்படுத்திய அருகில் உள்ள அணியாபரநல்லூர் கிராமத்தை சேர்ந்த மற்றொரு சமுதாயத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனாட்சிபட்டி ஊர் தலைவர் ராஜகோபால் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. தமிழக அரசு அரசாணை - யாருக்கெல்லாம் கிடைக்கும்.?