கோழியை திருடியதாகக் கூறி ஊர் மக்கள் முன்னிலையில் கணவன், மனைவி தாக்கப்பட்ட நிலையில் பஞ்சாயத்து தலைவர் உள்பட அவரது குடும்ப உறுப்பினர்களை கண்டித்து தம்பதியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சூழை வாய்க்கால் கணபதியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மிக்கேல் ராஜ். இவரது மனைவி வைத்தீஸ்வரி. இவர்களது குழந்தைகள் அந்தப் பகுதியில் சண்டையிட்டுக் கொண்டிருந்த சேவலை திருடியதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து சூளை வாய்க்கால் பஞ்சாயத்து தலைவரும், ஊர் நாட்டாமையுமான வேங்கையன் மற்றும் அவரது மனைவி வேளாங்கண்ணி மற்றும் அவர்களது மகன்கள் ஊர் பஞ்சாயத்தை கூட்டி மிக்கேல்ராஜ் மற்றும் வைத்தீஸ்வரி ஆகியோரது குழந்தைகள் ஊரில் காணாமல் போன கோழிகளை தொடர்ச்சியாக திருடி வந்துள்ளனர். எனவே கோழிகளை ஒப்படையுங்கள் என கூறியுள்ளனர்.
undefined
செந்தில் பாலாஜியால் முதல்வர் ஸ்டாலினுக்கு 1 லட்சம் கோடி வருவாய் கிடைத்தது - அண்ணாமலை பரபரப்பு தகவல்
இதற்கு மிக்கேல் ராஜ் மற்றும் வைத்தீஸ்வரி தங்கள் குழந்தைகள் வேறு கோழிகள் எதையும் திருடவில்லை என கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து பஞ்சாயத்து தலைவர் வேங்கையன், அவரது மனைவி வேளாங்கண்ணி, அவர்களது மகன்கள் ஆகியோர் மிக்கேல் ராஜ் மற்றும் அவரது மனைவி வைத்தீஸ்வரியை பஞ்சாயத்து கூட்டம் முன்பு தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மிக்கேல்ராஜ் மற்றும் வைத்தீஸ்வரி ஏரல் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க செல்வதற்கு முன்பாக வேங்கையன் குடும்பத்தார் இவர்கள் மீது புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. முதலில் வேங்கையன் குடும்பத்தார் புகார் கொடுத்ததால் தங்களால் ஏதும் செய்ய முடியாது என செய்த வைத்தீஸ்வரி, மிக்கேல்ராஜ் தம்பதியினர் அங்கிருந்து கிளம்பி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வந்துள்ளனர்.
இதை தொடர்ந்து மனமுடைந்த மிக்கேல்ராஜ் மற்றும் அவரது மனைவி வைத்தீஸ்வரி ஆகியோர் நேற்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அங்கு இருந்த காவல்துறையினர் அவர்களது உடலில் தண்ணீர் ஊற்றி பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இதை அடுத்து தற்கொலைக்கு முயன்ற கணவன், மனைவியை சிப்காட் காவல் துறையினர் கைது செய்து தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.