மாமன்னன் திரைபடத்தில் ஜாதி மோதலை உருவாக்கும் கருத்துக்கள் இருந்தால் படக்குழு அதனை நீக்க வேண்டும் என்றும், அதற்காக தேவர் மகன் திரைப்படத்தை ஒப்பிட்டு பேசக்கூடாது என - முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இலுப்பையூரணி பஞ்சாயத்துக்கு உள்பட்ட சிந்தாமணி நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 14 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு அடிக்கல் நாட்டில் பணியை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இருந்து கிளைச் செயலாளர் பாலமுருகன் அதிமுகவில் இணைத்து கொண்டனர்.
பின்னர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளரிடம் கூறுகையில் : அம்மா உணவங்களை மூடும் போக்கினை தமிழக அரசு கை விட வேண்டும் என்றார். இந்த ஆட்சி மாற்றம் நடைபெற்ற பிறகு அதிமுக கொண்டு வந்த தாலிக்கு தங்கம், அம்மா உணவகம், மகளிர்க்கு இரு சக்கர வாகனம் உள்ளிட்ட எல்லா திட்டங்களை எல்லாம் திமுக மூடு விழா நடத்தி வருகிறது என குற்றம்சாட்டினார்.
தேவர் மகன் திரைப்படம் வெளியான போது பல்வேறு விமர்சனங்களை வந்தாலும் மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது. தேவர் மகனில் கருந்து வேறுபாடுகள் இருந்திருந்தால் மக்கள் இவ்வளவு பெரிய ஆதரவை தந்திருக்க மாட்டார்கள் ஜனரஞ்கமான படமாக அமைந்தது.
பிரதமர் மோடி பாராட்டு: நினைவு கூர்ந்த முதல்வர் ஸ்டாலின்!
இன்றைய காலத்தில், ஜாதி மோதல்களை ஊக்குவிப்பர்கள் யாராக இருந்தாலும் கண்டிக்கத்தக்கது. அவ்வாறு இருந்தால் படக்குழு ஆராய்ந்து அதனை நிக்க வேண்டும் இதற்காக வெளியான பழைய படங்களை ஒப்பிட்டு பேசுவது தீர்வாகது. மாமன்னன் திரைபடத்தில் ஜாதி மோதலை உருவாக்கும் கருத்துக்கள் இருந்தால் படக்குழு அதனை நீக்க வேண்டும்.
அதிமுக இன்றைக்கு வரைக்கும் பாஜக கூட்டணியில் தான் தொடர்கிறது. சிறந்த பிரதமர் நரேந்திர மோடி தான் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம். அதிமுக பாஜக கூட்டணியில் முரண்பாடு ஏதுமில்லை என கூறினார்.