சாத்தான்குளத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; அ.ம.மு.க. நிர்வாகி கைது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் அமமுக பிரமுகரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ammk person arrested for sexual abuse case in thoothukudi

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை எம்மா கிழவிவிளை பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் வின்சென்ட் ராஜ் (வயது 32). கார் ஓட்டுநரான இவர் அ.ம.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மின்விளக்கு பழுதானதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அந்த வீட்டில் வசித்து வந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் மின்விளக்கை பழுது பார்ப்பதற்காக அந்த வழியாக சென்ற வின்சென்ட் ராஜை அழைத்துள்ளார். மின் விளக்கை சரி செய்வதற்காக அவர் அந்த பெண்ணின் வீட்டிற்குள் சென்றுள்ளார். அந்த சமயத்தில் வின்சென்ட் ராஜ் திடீரென்று அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. 

Latest Videos

இந்தியாவிலேயே தரம் குறைந்த மது தமிழ்நாட்டில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது - கிருஷ்ணசாமி

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட்டுள்ளார். பின்னர் வின்சென்ட் ராஜ் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து தட்டார்மடம் காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். அதன்பேரில், உதவி ஆய்வாளர் முகம்மது சபீக் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் இதுதொடர்பாக வின்சென்ட் ராஜை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.

நாட்டு வெடிகுண்டு வெடித்து பாகுபலி யானை காயம்? அதிகாரிகள் தீவிர விசாரணை

vuukle one pixel image
click me!
vuukle one pixel image