தந்தையின் மரணத்திற்கு திமுக தான் காரணம்; நீதி கேட்டு வந்த சிறுவர்களால் பரபரப்பு

Published : Jun 05, 2023, 08:10 PM IST
தந்தையின் மரணத்திற்கு திமுக தான் காரணம்; நீதி கேட்டு வந்த சிறுவர்களால் பரபரப்பு

சுருக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தனது தந்தையின் மரணத்திற்கு காரணமான திமுக மாவட்ட நிர்வாகம் இழப்பீடு வழங்காததை கண்டித்து நீதி வழங்கிடு என்ற பதாகைகளை கழுத்தில் அணிந்தபடி குழந்தைகள் தனது தாயுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ். கீரை உள்ளிட்ட வேளாண் பொருட்களை விற்பனை செய்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் அருகே உள்ள அண்ணா சிலை பகுதியில் உள்ள இரும்பு வேலியில் இருந்து மின்சாரம் தாக்கி கீரை வியாபாரி ஜெய்கணேஷ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த அண்ணா சிலை திமுக மாவட்ட நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு காரணமான திமுக மாவட்ட நிர்வாகம், தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம், தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகியவை ரூபாய் ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும். தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என ஜெய்கணேசன் மனைவி லிங்க சிவா தனது இரண்டு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார். ஆனால் கடந்த 10 நாட்களாக இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

திருமண நிகழ்வில் பாயாசம் சரியில்லாததால் மணமகன், மணமகள் வீட்டார் இடையே பயங்கர மோதல்

இதனைத் தொடர்ந்து இன்று மின்சாரம் தாக்கி உயிர் இழந்த ஜெய்கணேசின் இரண்டு குழந்தைகளும் எனது தந்தை சாவிற்கு காரணமான திமுக மாவட்ட நிர்வாகம், தூத்துக்குடி மாநகராட்சி, தமிழ்நாடு மின்சார வாரியம் இழப்பீடாக ரூபாய் ஒரு கோடி வழங்க வேண்டும். அரசு வேலை வழங்க வேண்டும். நீதி வழங்குக என்ற வாசகங்கள் அடங்கிய பதாககளை கழுத்தில் அணிந்தபடி தனது தாயுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். ‌

அரசு விழாவில் சுவர் ஏறி குதித்து சென்ற எம்எல்ஏ; முதல்வர் முன்னிலையில் ஆவேசமாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு

 மாவட்ட நிர்வாகம் தங்களது கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க விட்டால் தனது கணவர் இறந்த இடத்தில் வாழ்வாதாரம் இழந்துள்ள தாங்கள் தற்கொலை செய்துகொள்வோம் என கூறினர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!
விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை! ஒரே நாளில் 15 செ.மீ.! திருச்செந்தூர் முருகன் கோவிலின் நிலைமை இதுதான்!