குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை; கனிமொழியின் வாகனத்தை திடீரென மறித்த கிராம மக்களால் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Jul 13, 2023, 1:44 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை. தங்களுக்கு குடிநீர் வசதி செய்து தரவேண்டும் எனக்கோரி அவ்வழியாக சென்ற எம்.பி. கனிமொழியின் வாகனத்தை கிராம மக்கள் திடீரென மறித்ததால் பரபரப்பான நிலை ஏற்பட்டது.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் மட்ட பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான துவக்கவிழா இன்று நடைபெற்றது. இதில் எம்.பி. கனிமொழி, சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தனர். 

Latest Videos

undefined

இதைத்தொடர்ந்து, கழுகுமலை பேரூராட்சியில் அமைக்கப்பட இருக்கும் புதிய மேல் நிலை நீர் தேக்க தொட்டி, 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள பூங்கா பணிகளை கனிமொழி எம்.பி. துவக்கி வைத்தார். மேலும் தெற்கு கழுகுமலை, வெங்கடேஸ்வரபுரம், துரைச்சாமிபுரம் பகுதிகளில் நடைபெற்ற மக்கள் களம் நிகழ்ச்சியிலும் கனிமொழி எம்.பி கலந்து கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டார். 

மலைவாழ் மக்களுக்கு ரேஷன் பொருள் வழங்கிய பாஜகவினர்; தடுத்து நிறுத்திய திமுகவினரால் பரபரப்பு

இதற்கிடையில் கழுகுமலையில் நடைபெற்ற  நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவதற்காக கனிமொழி எம்.பி. காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, வானரமுட்டி கிராமத்தில் அவரது வாகனத்தை  வழி மறித்த பெண்கள், தங்கள் பகுதியில் குடிநீர் வரவில்லை என்றும், இதனால் குடிக்க தண்ணீர் இல்லமால் கடும் அவதிப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். தங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று கூறி முறையிட்டனர். 

கோவையில் புதுமண தம்பதிக்கு தக்காளி, வெங்காயத்தை அன்பளிப்பாக வழங்கிய விவசாயிகள்

குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பதாக கனிமொழி எம்.பி உறுதி அளித்தார். அவருடன் அமைச்சர் கீதாஜீவனும் இருந்தார். குடிநீர் பிரச்சினைக்காக எம்.பி.கனிமொழியின் வாகனத்தை திடீரென கிராம மக்கள் வழி மறித்ததால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

click me!