இரவு வேளையில் குடியிருப்புகளை தாக்கி யானைகள் அட்டகாசம்; ஆட்கள் வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு…

First Published Oct 17, 2017, 6:45 AM IST
Highlights
Elephants attacked homes at night Unsaved avoiding people leaving ...


நீலகிரி

வால்பாறை அருகே எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த ஐந்து யானைகள் தொழிலாளர்களின் குடியிருப்புகளை தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தினர். நல்ல வேளையாக குடியிருப்புக்குள் இருந்தவர்கள் சத்தம் கேட்டு வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

வால்பாறையை அடுத்த பன்னிமேடு எஸ்டேட்டின் பங்களா டிவிஷனுக்குள் குட்டியுடன் கூடிய ஐந்து யானைகள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு புகுந்தன.

அந்த யானைகள், கடந்த இரண்டு நாள்களேயே அந்தப் பகுதியிலேயே சுற்றித் திரிந்து மக்களை அச்சப்படுத்தி வந்தன.

இந்த நிலையில் நேற்று இரவு எஸ்டேட்டில் உள்ள தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் நுழைந்த யானைகள், குடியிருப்பின் சாளரம், கதவுகளை இடித்துத் தள்ளின. டீக்கடையை உடைத்து பொருட்களை சூறையாடின. ரேஷன் கடை, வீடு, கேன்டீன் ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தின.

சத்தம் கேட்டு எழுந்த தொழிலாளர்கள், யானைகளைப் பார்த்ததும் பின்பக்க வழியாகத் தப்பி வெளியேறினர்.

இதனையடுத்து, அந்த யானைகள் குடியிருப்புகளுக்குள் இருந்த பாத்திரங்களை வெளியே இழுத்துப் போட்டு சேதப்படுத்தின. உணவுக்காக குடியிருப்புகளை ஒரு வழி செய்தன.

காட்டு யானைகள், விடிய விடிய முகாமிட்டு, தொழிலாளர்கள் குடியிருப்பில் உள்ள 3 வீடுகளை உடைத்தது.

யானைகள குடியிருப்புகளை சேதப்படுத்திக் கொண்டிருக்கின்றன என்ற தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் வந்தனர். பின்னர், அவர்கள் மக்களுடன் இணைந்து அந்த யானைகளை அங்கிருந்து விரட்டினர்.

ஆனால், அந்த யானைகள் காட்டுப்பகுதிக்குள் செல்லாமல் அங்கேயே ஓய்வெடுத்தன. பின்னர், நீண்ட நேரம் கழித்து அவைகளாகவே வனத்துக்திற்குள் சென்றுவிட்டன.

ஐந்து யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து குடியிருப்புகளை சேதப்படுத்திய தகவல் அந்தப் பகுதியில் காட்டுத் தீயாய் பரவியது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்தன. யானைகள்  காட்டுப்பகுதிக்குள் சென்றுவிட்டன என்பதை கேட்டபிறகே அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.

click me!