அதிரடி மின்வாரியம்... ஒரே இடத்தில் குவிந்த பல்லாயிரம் ஊழியர்கள்...ஆனாலும் பத்து நாள் ஆகுமாம்!

By manimegalai aFirst Published Nov 18, 2018, 2:42 PM IST
Highlights

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகபட்சமாக வேதாரண்யம் பகுதியில் மட்டும் சுமார் இருபதாயிரம் மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்திருப்பதாகவும் இவற்றை சீரமைக்கும் பணியில் பனிரெண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகபட்சமாக வேதாரண்யம் பகுதியில் மட்டும் சுமார் இருபதாயிரம் மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்திருப்பதாகவும் இவற்றை சீரமைக்கும் பணியில் பனிரெண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப்புயல் நிவாரணப்பணியில் நேற்றிலிருந்தே அதிரடியாகக் களம் இறங்கிப் பணியாற்றி வருபவர்கள் மின்வாரிய ஊழியர்களே. அங்கு பணிபுரிபவர்கள் தவிர்த்து மக்கள் வேண்டுகோளை ஏற்று வெளி மாவட்டங்களிலிருந்தும் உதவிக்காக மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளனர்.

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மொத்தம் 84ஆயிரத்து 500 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாகத் தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது. 4200 கிலோமீட்டர் நீளத்துக்கு மின்கம்பிகள் சேதமடைந்துள்ளதாகவும், 850மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

புயல் பாதித்த பகுதிகளில் இதுவரை  12ஆயிரத்து 332பணியாளர்கள் மின்சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சீரமைப்புப் பணிகளை மின்துறை அமைச்சர் தங்கமணி, அமைச்சர்கள் வேலுமணி, காமராஜ், துரைக்கண்ணு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் விக்ரம் கபூர், எரிசக்தித் துறைச் செயலர் முகமது நசிமுதின் உள்ளிட்ட அதிகாரிகளும் மின்சீரமைப்புப் பணிகளை ஆய்வுசெய்து கண்காணித்து வருகின்றனர்.

முதல்கட்டமாக நகர்ப்புறங்களில் துவங்கியிருக்கும் இச்சீரமைப்பணி கிராமங்களை சென்றடைய இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்கள் வரை ஆகக்கூடுமென்றும் இப்பகுதிகளில் முழுமையான மின் வசதி அனைவருக்கும் கிடைக்க பத்து தினங்கள் வரை ஆகும் என்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் மின்வாரிய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

click me!