தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யலையா…? 3 ஆண்டு தகுதி நீக்கம்..! தேர்தல் ஆணையம் ஒரே போடு…

By manimegalai aFirst Published Oct 19, 2021, 9:08 AM IST
Highlights

தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் 3 ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று வேட்பாளர்களை தமிழக தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

சென்னை: தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் 3 ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று வேட்பாளர்களை தமிழக தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அண்மையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. தேர்வுகள் முடிவுகள் கடந்த 12ம் தேதி வெளியானது. அதில் பெரும்பான்மையான இடங்களை திமுக கைப்பற்றியது.

இந் நிலையில் இந்த உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற 9 மாவட்டங்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் 3 ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

உரிய அதிகாரிகளிடம் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ததற்கான ஒப்புகை சான்றை வேட்பாளர்கள் பெற்று கொள்ள வேண்டும். விவரங்களை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

click me!