அன்பான வாக்காள பெருமக்களே… இன்னிக்கு சாயந்தரம் 6 மணியுடன் முடிகிறது

By manimegalai aFirst Published Oct 4, 2021, 7:57 AM IST
Highlights

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிகிறது.

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிகிறது.

தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடக்கிறது. தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் களத்தில் உள்ளன.

 உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 80,819 பேர் களத்தில் இருக்கின்றனர். வேட்பாளர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினரும், சுயேட்சைகளுக்கு அவர்கள் ஆதரவாளர்களும் தீவிர ஓட்டு வேட்டையாடி வருகின்றனர்.

9 மாவட்டங்களில் ஊராட்சி உறுப்பினர்,ஊராட்சி தலைவர் என மொத்தம் 17,962 பதவிகளுக்கு முதல்கட்டமாக வரும் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அன்றைய தினம் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ள 9 மாவட்டங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது.

பிரச்சாரத்தின் கடைசி நாள் என்பதால் வேட்பாளர்களும், அவர்கள் ஆதரவாளர்களும் தீவிர ஓட்டு வேட்டையாடி வருகின்றனர். தங்கள் பங்குக்கு சுயேட்சைகளும் தீவிரமாக களத்தில் இறங்கி வாக்கு சேகரித்து வருகின்றனர்.

click me!