முதல் கட்டமாக அதிமுக வெளியிட்டுள்ள பரப்புரை அட்டவணையின்படி, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, சிதம்பரம், நாமநாதபுரம், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட மக்களவைத் தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரிக்க உள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தனது பரப்புரையை வரும் மார்ச் 24ஆம் தேதி திருச்சியில் தொடங்குகிறார். முதல் கட்ட பரப்புரைத் திட்டத்தின்படி, மார்ச் 31ஆம் தேதி வரை பிரசாரம் செய்ய உள்ளார்.
முதல் கட்டமாக அதிமுக வெளியிட்டுள்ள பரப்புரை அட்டவணையின்படி, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, சிதம்பரம், நாமநாதபுரம், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட மக்களவைத் தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரிக்க உள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் கூட்டணி இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், எடப்பாடி பழனிசாமியின் முதல் கட்ட பரப்புரை தேதிகள் வெளிவந்துள்ளன. ஏப்ரல் 14ஆம் தேதி வரை பரப்புரை செய்ய அனுமதி உள்ளதால் இரண்டாம் கட்ட பரப்புரை திட்டம் குறித்த அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குட்டிப் பேரனுக்கு ரூ. 240 கோடி பங்குகளை பரிசாக வழங்கிய இன்போசிஸ் நாராயண மூர்த்தி
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. அவர்களின் தேர்தல் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் - முதல் கட்டம்
24.03.2024 முதல் 31.03.2024 வரை. pic.twitter.com/YODDoZRfdO
24ஆம் தேதி மாதலை 4 மணிக்கு திருச்சி வண்ணாங்கோவிலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் ஈபிஎஸ் தனது பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். 26ஆம் தேதி தூத்துக்குடி, நெல்லை, 27ஆம் தேதி கன்னியாகுமரி, தென்காசி தொகுதிகளில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவார்.
விருதுநகர், ராமநாதபுரம் தொகுதிதகளில் மார்ச் 28ஆம் தேதி, காஞ்சிபுரம் (தனி), ஶ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் மார்ச் 29ஆம் தேதியும் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொள்வார். மார்ச் 30ஆம் தேதி புதுச்சேரி, கடலூர் தொகுதிகளிலும், மார்ச் 31 ஆம் தேதி சிதம்பரம் (தனி), மயிலாடுதுறை, நாகப்பட்டினம் (தனி) தொகுதிகளிலும் ஈபிஎஸ் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுவார்.
இதனிடையே, திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மார்ச் 22 முதல் மக்களவைத் தேர்தல் பரப்புரையைத் தொடங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து கட்சிகளின் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
'இணைந்து செயல்படுவோம்!' மீண்டும் ரஷ்ய அதிபரான புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து