எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் உள்ள தலைமைக் கழகத்தில் நடைபெறுகிறது
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற உள்ளது. இதில் மதுரையில் நடைபெற்ற உள்ள மாநாடு, 2024 பொதுத்தேர்தல் நிலைப்பாடு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் உள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் புதன்கிழமை காலை 9 மணிக்கு அதிமுக தலைமைக் கழக செயலாளர்கள் மற்றும் மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து தலைமைக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் கலந்துகொள்கிறார்கள்.
விடிய விடிய பெய்த மழை! வால்பாறை தாலுகாவில் மட்டும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
இந்தக் கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்தும் மதுரை மாநாடு குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்று சொல்லப்படுகிறது. மேகதாது அணை விவகாரம், ஓபிஎஸ் அணியின் அடுத்த மாநாடு, அதிமுக - பாஜக கூட்டணி, அதிமுக உறுப்பினர் சேர்க்கை பணிகள் உள்ளிட்டவை பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கட்சி வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
இதற்கு முன் கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்துப் பேசியதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்றைய கூட்டத்தைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
மணிப்பூரில் ஆயுதங்களை கொள்ளையடிக்க முயன்ற கும்பல்; துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டிய போலீஸ்