இந்தியாவிலேயே முதல் முறையாக மதுரை ரயில் நிலையத்தில் கருவாட்டு கடை..! அசத்தும் மகளிர் சுய உதவிக்குழு

Published : Feb 12, 2023, 01:52 PM ISTUpdated : Feb 12, 2023, 01:59 PM IST
இந்தியாவிலேயே முதல் முறையாக  மதுரை ரயில் நிலையத்தில் கருவாட்டு கடை..! அசத்தும் மகளிர் சுய உதவிக்குழு

சுருக்கம்

இந்திய ரயில்வேயில் முதல்முறையாக மதுரை ரயில் நிலையத்தில் உலர் மீன் விற்பனை கூடம் இன்று திறக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் பாம்பன் பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர் துங்கியுள்ளனர்.

ரயில் நிலையத்தில் கருவாட்டு கடை

மகளிர் சுய உதவி குழுக்குள் மூலம் ஒன்றினையும் மகளிர்கள் பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். அந்த பொருட்களின் விலை குறைவாகவும், தரமாக இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர். இந்தநிலையில் மகளிர் சுய உதவி குழுவின் அடுத்த கட்ட முயற்சியாக இந்தியாவிலேயே முதல் முறையாக ரயில் நிலையத்தில் பாலித்தீன் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு உலர் மீன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மதுரை ரயில் நிலையத்திலிருந்து இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.  அந்த பயணிகளின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், மதுரை ரயில் நிலையத்தில் உலர் மீன் கடை துவங்கப்பட்டுள்ளது.

ஈரோடு இடைத்தேர்தல்..! அதிமுகவிற்கு ஆதரவாக களத்தில் இறங்கிய அண்ணாமலை..! பிரச்சாரத்திற்கு தேதி அறிவிப்பு

முதல்முறையாக கருவாட்டு கடை

ரயில் பயணிகளை கவரும் வண்ணமும் அவர்கள் விரும்பி வாங்கிச் செல்லும் வகையிலும்  ஒன் ஸ்டேஷன் ஒன் பிராடக்ட் என்ற பாரதப் பிரதமரின் திட்டத்தின் கீழ் மதுரை ரயில் நிலையத்தில் மதுரைக்கே உரித்ததான சுங்குடி சேலை விற்பனை கூடம் ஏற்கனவே இயங்கிவருகிறது.  தற்போது  இந்திய ரயில்வேகளில் முதல்முறையாக மதுரை ரயில் நிலையத்தில் லூமிரியன்ஸ் டிரை பிஷ் ஹட் என்னும் கருவாட்டு விற்பனை கூடம் இன்று துவங்கப்பட உள்ளது. விமான நிலையங்களில் அதிநவீன விற்பனை கூடங்கள் இருக்குமோ அதே போன்று வரக்கூடிய வாடிக்கையாளர்களை கவரும் வண்ணமும் அவர்கள் எளிதில் பொருட்களை வாங்கிச் செல்லும்வகையில் 100 ரூபாயில் இருந்து  கருவாடுகள் விற்கப்பட உள்ளன. 

அசத்தும் மகளிர் சுய உதவி குழு

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் இருக்கக்கூடிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் கருவாடுகள் பேக் செய்யப்பட்டு இந்த விற்பனை கூடத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது. தமிழகத்தின் முதல் கருவாட்டு விற்பனை கூடத்தை ஸ்டார்ட் அப் நிறுவனத்தில்தமிழ் நாட்டின் தலைவர்  துவக்கி வைக்கிறார்.

இதையும் படியுங்கள்

சட்டப்படி கடமைகள் செய்து தமிழகத்திற்கு பெருமை சேருங்கள்.! சி.பி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்

PREV
click me!

Recommended Stories

ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!
செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!