புது வீடு குடியேறும் நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள்..! பவானி ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கி 3 பேர் பலி

Published : Feb 12, 2023, 12:27 PM ISTUpdated : Feb 12, 2023, 12:29 PM IST
புது வீடு குடியேறும் நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள்..! பவானி ஆற்றில் குளித்த போது  நீரில் மூழ்கி 3 பேர் பலி

சுருக்கம்

கிரகப்பிரவேஷம் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் பவானி ஆற்றில் குளிக்க சென்ற போது, திடீரென பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நீரில் மூழ்கி 3 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

பவானி ஆற்றில் குளியல்

கோவை அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாக்கியம் (60) இவர் தனது மருமகள் ஜமுனாவின் அம்மா வீடு அமைந்துள்ள சிறுமுகை பகுதிகளுக்கு  கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மேட்டுப்பாளையம் அடுத்துள்ள வச்சினம்பாளையம் பகுதிக்கு வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை பாக்கியம் அவருடைய அண்ணன் பாலகிருஷ்ணன் மருமகள் ஜமுனா, மோனிகா மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் சகுந்தலா ஆகியோர் வச்சினம்ப்பாளையம் பவானி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.

3 பேர் பலியான பரிதாபம்

அனைவரும் ஆற்றில் குளித்து கொண்டு இருந்த போது பில்லூர் அணையில் இருந்து திடீரென தண்ணீர் திறந்து விடப்பட்டதால் 6 பேரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பவானி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று பேரை மீட்டனர். பாக்கியம்,ஜமுனா சகுந்தலா,ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.  மீட்கப்பட்ட மூவருக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இச்சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்

இந்தியாவை கொள்ளையடிக்க அதானிக்கு ஆதரவாக செயல்படும் மோடி..! பரபரப்பு குற்றச்சாட்டு கூறிய ஜோதிமணி

PREV
click me!

Recommended Stories

ADMK Clash | மீண்டும் அதிமுகவில் அதிரடி.! இபிஎஸ்க்கு எதிராக ஒன்றுதிரண்ட அதிமுகவினர்?!
Tamilnadu 12th Result: 12ம் வகுப்பு முடிவுகள் வெளியாகுவதில் சிக்கல்.. என்ன காரணம்? லேட்டஸ்ட் ரிப்போர்ட்!