பட்ஜெட்டில் உணவு, உரத்துக்கான மானியம் நிறுத்தியது மக்கள் விரோத செயல் - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

By Velmurugan s  |  First Published Feb 11, 2023, 6:48 PM IST

தஞ்சையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற மத்திய பட்ஜெட் குறித்த கருத்தரங்கில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், உணவு, உரத்துக்கான மானியத்தை நிறுத்தியது மக்கள் விரோத செயல் என்று குற்றம் சாட்டியுள்ளார்.


தஞ்சை தனியார் கல்லூரி வளாகத்தில் சேம்பர் ஆப் காமர்ஸ் அன்ட் இன்டஸ்ட்ரி சார்பில் மத்திய பட்ஜெட் 2023 - 24 குறித்த கருத்தரங்கம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில், முன்னான் மத்திய நிதி அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், வேலைவாய்ப்பை உருவாக்குவதில் சிறுகுறு தொழில்களின் பங்கு அதிகம். 

கொரோனா காலத்தில் சிறுகுறு தொழில்கள் பெரும் பகுதி முடக்கப்பட்டது. அவைகளுக்கான எந்த ஒரு சிறப்பு அம்சமும், அவற்றை முன்னேற்றுவதற்கான எந்த ஒரு செயல் திட்டமும் இந்த பட்ஜெட்டில் இல்லை. ஜீஎஸ்டி அதிக அளவு கட்டுபவர்கள் ஏழை எளியவர்கள் தான். அவர்களுக்கான எந்த நிவாரணமும் இதில் இல்லை. 

Latest Videos

பெரும் பணக்காரர்கள், செல்வந்தர்களுக்கான பட்ஜெட்டாக தான் உள்ளது. இருபது ஆண்டுகள் 8 சதவீதம் வளர்ச்சி அடைந்தால் தான் நாடு முன்னேற்றம் அடையும். ஆனால் கடந்த பத்து. ஆண்டுகளில 5.6 சதவீதம்தான் வளர்ச்சி அடைந்துள்ளது. முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சியில் 7.5 சதவீதம் இருந்தது. ஆண்டுக்கு இரண்டு சதவீதம் வளர்ச்சி தற்போது குறைந்துள்ளதாக குற்றம்சாட்டினார். 

மொழி மீது கொண்ட ஈர்ப்பால் தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டு தம்பதி

இடுபொருள்களுக்கும், உரங்களுக்கும் மானியம் தேவை. அவர்கள் மானியம் நிறுத்தியதால் அதன்  விலைகள் உயர்கிறது. உணவு பொருள்களுக்கும் மானியம் வழங்க வேண்டும், உரங்களுக்கும் மானியம் வழங்க வேண்டும். உணவுக்குத் தரவேண்டிய மானியத்தையும் - உரங்களுக்குத் தர வேண்டிய மானியத்தையும் வெட்டினார்கள் அது மக்கள் விரோத செயல். எந்த மக்களுக்கும் சலுகைகள் வழங்கக்கூடிய நிதிநிலை அறிக்கை இதில் இல்லை. நிதிநிலை அறிக்கையால் யாருக்கு பயன் என்றால், பெரிய பணக்காரர்கள் தங்களது செல்வங்களை பெருக்கிக் கொள்வதற்கான நிதி நிலையாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

click me!