பொங்கல் விடுமுறையை கொண்டாட தாத்தா வீட்டிற்கு சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி

Published : Jan 18, 2023, 09:41 AM IST
பொங்கல் விடுமுறையை கொண்டாட தாத்தா வீட்டிற்கு சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி

சுருக்கம்

பொங்கல் விடுமுறைக்கு கொண்டாடுவதற்காக தாத்தா வீட்டிற்கு சென்ற சிறுவன், குளிக்கச் சென்ற போது ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த அய்யாவாடி பகுதியைச் சேர்ந்த ஞானதுரை என்பவரது மகன் விஜய் (வயது 13). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நான்கு நாட்கள் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதால், விஜய் திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள கூந்தலூர் கிராமத்தில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக சென்றுள்ளார். 

தமிழ்நாட்டிற்கு தனி கொடி வேண்டும்..! பாஜகவினரை அலறவிடும் திமுக எம்எல்ஏவின் கோரிக்கை

இந்த நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள நண்பர்களுடன் அருகிலுள்ள அரசலாற்றில் குளிப்பதற்காக விஜய் சென்றுள்ளார். நண்பர்களுடன் ஆற்றில் குளித்து விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது விஜய் திடீரென நீரில் மூழ்கி உள்ளார். இதனால் செய்வதறியாது திகைத்த அவனது நண்பர்கள் சுதாரித்துக் கொண்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் உதவி கேட்டுள்ளனர். 

இபிஎஸ்யை காலி செய்து, இரட்டை இலையை முடக்கி விடுவேன் என எச்சரித்த அண்ணாமலை.? கிஷோர் கே சாமி பரபரப்பு தகவல்

உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ஆற்றில் மூழ்கிய சிறுவனை மீட்டு எரவாஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் விஜய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து எரவாஞ்சேரி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து எரவாஞ்சேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கதறிய 9ம் வகுப்பு பள்ளி மாணவன்.. ஓயாமல் 4 பேர் டார்ச்சர்.. கட்டாய ஓரின**சேர்க்கையால் அதிர்ச்சி!
திமுக முக்கிய தலைவர் வீட்டில் கொள்ளையடித்தவர்கள் இவர்கள் தான்! எவ்வளவு சவரன் நகை? வெளியான அதிர்ச்சி தகவல்!