தஞ்சாவூரில் தீண்டாமையை கடைபிடித்த கடைக்காரர்… வீடியோ வெளியானதால் அதிர்ச்சி!!

By Narendran S  |  First Published Dec 1, 2022, 5:36 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் கிளாமங்கலத்தில் கடைக்காரர் ஒருவர் தீண்டாமையை கடைபிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


தஞ்சாவூர் மாவட்டம் கிளாமங்கலத்தில் கடைக்காரர் ஒருவர் தீண்டாமையை கடைபிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக தஞ்சாவூர் மாவட்டம் கிளாமங்கலத்தில் கடந்த 28 ஆம் தேதி நடந்த ஒரு பஞ்சாயத்து கூட்டத்தில் எஸ்.சி. மக்களை ஒதுக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு எந்த பொருளையும் விற்கக் கூடாது என்றும், டீக்கடை அல்லது முடிதிருத்தும் கடையைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் பஞ்சாய்த்து கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் ஆதி திராவிடர் சமுகத்தை சேர்ந்த ஒருவர், கடையில் பெட்ரோல் கேட்கும் போது உங்களுக்கு தரக் கூடாது என கிராமத்தில் தடை விதித்து இருப்பதாக மளிகை கடைக்கார் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியையும் கைப்பற்ற வேண்டும்..! மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்ட மு க ஸ்டாலின்

Latest Videos

இந்த வீடியோ சமுக வலைதளங்களில் வைரலானதை அடுத்து ஒரத்தநாடு தாசில்தார் சுரேஷ் கிளாமங்கலம் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது தாழ்த்தப்பட்ட சாதியினரை பாரபட்சமாக நடத்தும் வழக்கம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, கேமராவில் சிக்கிய கடை உரிமையாளர் வீரமுத்துவை, எஸ்சி/எஸ்டி வன்கொடுமைச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் கைது செய்து, அவரது கடைக்கு சீல் வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: கீழக்கரையில் அரிய வகை 2 டால்பின்கள்; கடலில் சேர்த்த மீனவர்களுக்கு குவியும் பாராட்டு வைரல் வீடியோ!

மேலும் தேநீர் கடைகளிலும் இரட்டை குவளை முறை பின்பற்றப்பட்டதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். இதேபோன்று முடிதிருத்தும் கடைகளிலும் எஸ்சி சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சேவைகள் மறுக்கப்பட்டன. இதை அடுத்து அந்த பகுதியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி.யான ரவிக்குமார், மாநிலத்தில் தீண்டாமையைக் கடைப்பிடிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநில எஸ்சி/எஸ்டி ஆணையத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார்.  

click me!