டெல்டா மாவட்டங்களில் 3 வது நாளாக தொடரும் கனமழை.. 50 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின..

By Thanalakshmi V  |  First Published Nov 5, 2022, 5:15 PM IST

வட கிழக்கு பருவமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் கொட்டி தீர்க்கும் கனமழையால், சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. 
 


தமிழகத்தில் கடந்த 29 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனையடுத்து பல்வேறு மாவட்டங்களில்  கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த சில தினங்களாக டெல்டா மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. 

இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரப்பட்டிருந்த சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின. 3 வது நாளாக பெய்து வரும் மழையால், தண்ணீர் வடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Latest Videos

இதே போல் சீர்காழி மற்று அதனை சுற்றியுள்ள கதிராமங்கலம், பெருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால், நடவு செய்யப்பட்ட சுமார் 20ஆயிரம் ஏக்கர் பரப்பிளலான சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

மேலும் படிக்க:அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகும் மழை.. இந்தெந்த மாவட்டங்களில் கனமழை..

அதுமட்டுமின்றி, நாட்டுக்கன்னி மணி ஆற்றின் கரை உடைந்ததால், சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் வெள்ளநீர் வயலுக்குள் புகுந்துள்ளது.இதே போல் சின்ன பெருந்தோட்டம் அருகே வயலுக்குள் சுமார் 750 ஏக்கர் விளைநிலங்களில் கடல் நீர் புகுந்ததால், தற்போது சிறிய கடல் போல் காட்சியளிக்கிறது. 

இதுபோல் தென்னாம்பட்டினம் ஊராட்சியில் சுமார் 300 ஏக்கர் வயலில் கடல் நீர் புகுந்துள்ளது. மக்கள் குடியிருப்புகளிலும் தண்ணீர் சூழந்துள்ளதால், அத்தியாவசிய பணிகளுக்கு கூட வெளியில் வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க:இன்று 15 மாவட்டங்களில் கனமழை.. எந்தெந்த பகுதிகளில் அடித்து ஊற்றப் போகும் மழை.. வானிலை அப்டேட்..

click me!