கொரோனாவுக்கு பின் மாரடைப்பை தடுக்க அமைச்சர் மா சுப்ரமணியன் சொல்லும் ஆலோசனை

By Velmurugan s  |  First Published Jan 17, 2023, 3:22 PM IST

கொரோனாவுக்குப் பின்னர் மாரடைப்பு ஏற்படும் விகிதம் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், உடற்பயிற்சி செய்வதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


தஞ்சை மாவட்டத்தை பொருத்தவரை தமிழக முதல்வர் ஏற்கனவே பல்வேறு மருத்துவ திட்டங்களை கொடுத்துக் கொண்டு இருக்கிறார். தற்போது புற்றுநோய் சிகிச்சைக்கான மையம் தஞ்சையில் உருவாகிக் கொண்டுள்ளது. டெல்லியில் உள்ளது போல நான்கு பணியிடங்களுடன் கூடிய குடிசை பகுதியில் இருக்கக்கூடிய மருத்துவமனை போல தமிழகத்தில் 708 மருத்துவமனை கட்டப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.

இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.  பிப்ரவரி முதல் வாரத்தில் 500க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை சென்னையில் இருந்து இந்த மருத்துவமனைகளை தமிழக முதல்வர் திறந்து வைப்பார். தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை மாநகராட்சியில் 8, கும்பகோணத்தில் 3, பட்டுக்கோட்டையில் ஒன்று என 12 மருத்துவமனைகள் புதிதாக திறக்கப்பட உள்ளன. 

Latest Videos

undefined

புதுக்கோட்டையில் விமரிசையாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்; சீறிப் பாய்ந்த காளைகள்

கொரோனா வீட்டிற்கு பிறகு மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து உள்ளன. இதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆய்வுக்கு பிறகு இது குறித்து முழுமையாக தெரியவரும். இருப்பினும் உடற்பயிற்சி செய்து உடலை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சிகள் மாரடைப்பு வருவதை தடுக்க உபயோகமாக இருக்கும். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஓரிலக்கத்தில் மட்டுமே உள்ளது. நேற்று 4000 பேருக்கு பரிசோதனை செய்ததில் ஆறு பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் உருமாற்றம் உலகம் முழுவதும் பரவிக் கொண்டு இருக்கிறது. சென்னை, மதுரை, கோவை, நெல்லை போன்ற விமான நிலையங்களில் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வருபவர்கள் 100% பரிசோதிக்கப்பட்டு வருகிறார்கள். 

பாதிப்பு என்பது ஒரே பகுதியில் நிறைய நபர்களுக்கு இருந்தால் அந்த பகுதியை மூடி பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாஸ்க் போட வேண்டும் என்ற சட்டம் 2020ல் இருந்து நடைமுறையில் உள்ளது. மாஸ்க் அணிந்து கொள்வது நல்லது. 

ஓசூரில் 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சம்: கிராம மக்கள் அச்சம்

ரத்தத்தை எடுத்து ஓவியமாக வரைந்து காதலர்களுக்கு பரிசளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எம்ஆர்பி செவிலியர்கள்  4308 பேர் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. கொரோனா காலத்தில் பணியாற்றிய எம்ஆர்பி செவிலியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சித்தா ஹோமியோபதி ஆயுர்வேதம் ஆகிய பிரிவுகளில் 128 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் அவர்களுக்கான பணி நியமன ஆணை விரைவில் முதல்வர் வழங்குவார். எம்ஆர்பி மூலம் செவிலியர்கள் எடுக்கும் போது ஏற்கனவே பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

click me!