வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்டமாவட்டங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை மையம் எச்சரிக்கை
undefined
வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்டமாவட்டங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியிருந்தது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இதையும் படிங்க;- பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு ஆதார் கட்டாயம்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு..!
தஞ்சை பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிகிறது. சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- கனமழை எதிரொலி... திருவாரூர், காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!!
அதேபோல் மழையின் காரணமாக நாகை மாவட்டத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நேற்றைய தினமே மழை காரணமாக திருவாரூர் மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.