விசாரணை முடியல! குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ல! அபாண்டமான குற்றச்சாட்டு சுமத்தலாமா? ரஞ்சித்துக்கு திமுக பதிலடி

By vinoth kumar  |  First Published Jul 9, 2024, 3:14 PM IST

ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரத்தில் திமுக மீது பா.ரஞ்சித் அபாண்டமான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார் என சரவணன் அண்ணாதுரை விமர்சனம் செய்துள்ளார்.


ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில் அதற்கு சரவணன் அண்ணாதுரை பதில் அளித்துள்ளார். 

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இயக்குநரும், ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பருமான பா. ரஞ்சித் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். 

Tap to resize

Latest Videos

undefined

அதில், சென்னை மாநகரில் செம்பியம் காவல் நிலையத்திற்கு மிக அருகாமையிலேயே படுகொலை நடந்திருக்கிறது. இதை வைத்தே தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து கொலையாளிகளுக்கு எத்தகைய பயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். எனவே, சட்ட ஒழுங்கை சீர் செய்ய, இனியும் இப்படி ஒரு சம்பவம் நிகழாமல் இருப்பதற்கு என்ன செயல் திட்டம் உருவாக்க போகிறீர்கள்?  படுகொலை செய்ததாக ஒப்புக்கொண்டு சரணடைந்த கயவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆற்காடு சுரேஷின் படுகொலைக்கு பழிவாங்கவே இதை செய்திருப்பதாக காவல் துறையினரும் அறிவித்திருக்கிறார்கள். 

இதையும் படிங்க: விசாரணை முடியல! குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ல! அபாண்டமான குற்றச்சாட்டு சுமத்தலாமா? ரஞ்சித்துக்கு திமுக பதிலடி

சரணடைந்தவர்கள் சொல்வதையே வழிமொழிந்து இந்த வழக்கை முடித்துவிடவே காவல் துறையினர் ஆர்வம் காட்டுகிறார்கள். இதை திட்டமிட்டு ஏவியவர்கள் யார்? அவர்களை இயக்கியவர்கள் யார்? இதற்கு வேறு பின்னணி இல்லை என்கிற முடிவுக்கு காவல் துறை வந்து விட்டதா? என கேள்வி எழுப்பியிருந்தார். மேலும்  திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன். அந்த ஆதங்கத்திலேயே இந்த கேள்விகளை முன் வைக்கிறேன். வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா? என அடுக்கான கேள்விகளையும்  திமுகவை விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரத்தில் திமுக மீது பா.ரஞ்சித் அபாண்டமான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார் என சரவணன் அண்ணாதுரை விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக செய்தித்தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: திமுகவை தலித் மக்களின் நலன்களுக்கு எதிரான கட்சி என கட்டமைக்க பாஜக வெகு காலமாக முயன்று வருகிறது. அதிலே படுதோல்வியைத் தான் சந்தித்துக் கொண்டிருக்கிறது. சந்திக்கவும் போகிறது. அண்ணன் ஆம்ஸ்டிராங்க் அவர்கள் கொலை என்ன காரணத்திற்காக நடந்திருக்கிறது, யாரெல்லாம் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள்  என விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் போதே, திமுகவின் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார் அண்ணன் பா. ரஞ்சித் அவர்கள். 

இதையும் படிங்க:  Armstrong Murder News: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்? வெட்டிய விதத்தை பார்த்தா இவங்களா இருக்குமோ?

அண்ணன் பா. ரஞ்சித் அவர்களுக்கு முக்கிய கேள்வி? 

இந்த வழக்கில் விசாரண முடியவில்லை, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை, அதற்குள் போலிசார் கொலைக்கு இதுதான் காரணம் என முடிவு செய்துவிட்டார்களா என எந்த அடிப்படையில் கேள்வி எழுப்புகிறீர்கள்? விசாரணையின் போக்கை வெளியில் சொல்ல மாட்டார்கள், சொல்லக் கூடாது என்ற அடிப்படை தெரியாதவரா தாங்கள்? 

ஒடுக்கப்பட்டவர்களின் விடி வெள்ளியாய் செயல்படும் திமுகவின் மீது தலித் மக்களின் நலனுக்கெதிரானவர்கள் என்ற போலி பிம்பம் இந்த சம்பவத்திற்கு பின்னர் பல மடங்கு வீரியத்துடன்   சமூக வலைத்தளங்களில் கட்டமைக்கப்படுகிறதே அது தங்களுக்கு தெரியவில்லையா? அந்த போலி பிம்பத்தை உறுதிப்படுத்தவே இந்த பதிவா? 

திமுகவை தலித் மக்களின் நலன்களுக்கு எதிரான கட்சி என கட்டமைக்க பாஜக வெகு காலமாக முயன்று வருகிறது. அதிலே படுதோல்வியைத் தான் சந்தித்துக் கொண்டிருக்கிறது, சந்திக்கவும் போகிறது.

அண்ணன் திரு. ஆம்ஸ்டிராங்க் அவர்கள் கொலை என்ன காரணத்திற்காக நடந்திருக்கிறது, யாரெல்லாம்… https://t.co/fOfYLEnuyj

— Saravanan Annadurai (@saravofcl)

தமிழ் நாட்டின் காவல்துறை சிறப்பான அமைப்பு. இந்த வழக்கில் எல்லா குற்றவாளிகளையும் கண்டறிந்து, அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தரக்கூடிய வல்லமை பெற்றவர்கள் என்று தெரிவித்துள்ளார்.

click me!