ADMK: சர்வாதிகாரத்தோடு, தெனாவெட்டாக அவர மாதிரி நான் பேசமாட்டேன்; ஈபிஎஸ் குறித்த கேள்விக்கு ஓபிஎஸ் பதில்!!

By Velmurugan s  |  First Published Jul 9, 2024, 2:38 PM IST

அடுத்து வரும் தேர்தல்களில் அதிமுக ஒன்றிணையாமல் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு கிடையாது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் தான் கள்ளச்சாராயத்தையும், விஷசாராயத்தையும் ஒழிக்க முடியும் என்பது எனது கருத்து. அதை அரசு செய்ய வேண்டும். 

Latest Videos

ஏற்கனவே நான் தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறேன். அதே போன்று மாண்புமிகு சின்னமாவும் சந்திக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெறட்டும். 90 சதவீத தொண்டர்களை சசிகலா இணைத்ததாக கூறியதை நான் வரவேற்கிறேன். 

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; இருவர் உடல் கருகி பலி, இருவர் படுகாயம்

எடப்பாடி பழனிசாமியை போல் நான் தெனாவட்டாகவோ, சர்வாதிகாரத்தோடோ பேசமாட்டேன் என்பது நாட்டு மக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் நன்றாக தெரியும். கட்சியை இணைப்பது தான் ஒரே வழி. இனி வரக்கூடிய தேர்தல்களில் வெற்றி பெற வேண்டுமென்றால் கட்சி இணையாமல் அது சாத்தியமில்லை. என்னை மன்னிப்பு கடிதம் கொடுக்கச் சொல்வதற்கு பழனிசாமி யார்? பொதுச்செயலாளர் வழக்கு இன்னும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த இயக்கம் தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். உறுதியாக ஒரு தொண்டர் அதிமுக தலைமை ஏற்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து.

சிலிண்டர் வாங்க பணம் கேட்டது ஒரு குத்தமா? மனைவி, பக்கத்து வீட்டுக்காரரை சம்பவம் செய்த இரட்டை கொலை மன்னன்

சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சீர்கெட்டு கிடைக்கிறது. அதை சரிப்படுத்தக் கூடிய வழியை முதல்வர் செய்ய வேண்டும். அப்படி செய்யத் தவறினால் அடுத்த முறை ஆட்சிக்கு வருவது கேள்விக்குறியாகி படுதோல்வி அடைவார். புதிதாக நடைமுறைபடுத்தி உள்ள 3 குற்றவியல் சட்டங்களை ஆங்கிலத்தில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

click me!