Annamalai: அனுபவமும், தகுதியும் இல்லாத அண்ணாமலை போன்றவர்களால் பாஜக.வுக்கு சரிவு - உதயகுமார் பேச்சு

By Velmurugan sFirst Published Jul 6, 2024, 3:31 PM IST
Highlights

அரசியலில் போதிய அனுபவமும், தகுதியும் இல்லாத அண்ணாமலை போன்றவர்களால் பாஜக சரிவை சந்தித்துள்ளதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

மதுரை அட்சய பாத்திரம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி காந்தி மியூயத்தில் நடைபெற்றது. நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி  உதயகுமார் வழங்கினார். இதனைத் தொடர்ந்து ஆர்பி உதயகுமார் பேசியதாவது, தமிழக அரசியலில் வெத்து விளம்பரம், வெளிச்சம் காட்டும் வகையில் அரசியல் அனுபவம் இல்லாதவர்கள் பொது வாழ்வில் அனுபவம் இல்லாமல், அரசியல் பண்பு இல்லாமல் அண்ணாமலை பேசிகிறார். 

 எடப்பாடியார் மீது அடிப்படை ஆதாரம் இல்லாமல் பேசுவது கடும் கண்டனத்துக்குரியது. தன்னை முன்னிலைப்படுத்த தேவையான அனுபவம், தகுதி வேண்டும். ஆனால் அண்ணாமலை பெற்றுள்ளாரா ? எதுவும் இல்லை. கற்பனையை கொட்டி விட்டு கனவுலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது அவரின் பேச்சு தெளிவாக காட்டுகிறது.

Latest Videos

குஜராத்தில் பாலை விற்று வருமானத்தை ஈட்டினார்கள்; இங்கு மதுவை விற்று வருமானம் ஈட்டப்படுகிறது - நீதிபதி வேதனை

எடப்பாடி பழனிாமி தமிழகத்தின் முதலமைச்சராக இருந்து தமிழகத்திற்கு சேவைகள் செய்தார் அவர் செய்த சாதனைகளை பட்டியலிட்டு சொல்ல முடியும். 7.5 இட ஒதுக்கீடு கொண்டு வந்து மருத்துவ கனவை நினைவாக்கி வரலாற்றில் இடம் பிடித்தார். ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், குடிமராமத் திட்டங்கள், தமிழகத்தின் சாலைகளை மேம்படுத்தினார், உயர் பாலங்கள் மேம்பாட்டு வளர்ச்சிங்கள் என கடந்த நான்கரை ஆண்டு காலம் மக்களுக்கு சேவை செய்தார்.

அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்துவதற்கு நினைக்கிறார். அவர் ஆற்றிய பணிகள், தியாகம், உழைப்பு உள்ளதா எதுவும் இல்லை. ஏற்கனவே அரவக்குறிச்சியில் நின்று தோற்றுப் போனார். அதனை தொடர்ந்து கோவையில் பல கோடி வாரி இறைத்து பல்வேறு வார்த்தை ஜாலம் வித்தைகளை காண்பித்தார். மக்கள் அதை நிராகரித்து விட்டனர். ஆனால் இன்றைக்கு பிஜேபி வளர்ச்சி அடைந்து விட்டது என்று சொல்லி விவாதம் நடத்துகிறார்.

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரத பிரதமர் ,உள்துறை அமைச்சர் அதனை தொடர்ந்து நட்டா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 15 மூத்த அமைச்சர்கள் களத்தில் நின்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் தமிழகத்தில் ஒரு இடம் கூட பிடிக்க முடியவில்லை. இதற்கு காரணம் அண்ணாமலை போன்ற அவசரக்குடுக்கைகள் தான்.

கஞ்சா புகைத்து மட்டையாவது எப்படி? என வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் - கொத்தாக அள்ளிசென்ற போலீஸ்

கடந்த 2014 ,2019 நடைபெற்ற தேர்தலை பார்க்க வேண்டும் பாரத பிரதமர் வாரணாசியில் கடந்த 2019 போன்ற காலங்களில் ஐந்தரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார், ஆனால் தற்பொழுது 1.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் அதுவும் 3, 4 சுற்று பின்தங்கி அதன் பின் தான் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

2019 நாடாளுமன்ற தேர்தலில்  தனி மெஜாரிட்டி பிடித்தது தற்பொழுது மெஜாரிட்டி இடம் கூட பிடிக்க முடியவில்லை கூட்டணி தேவால்தான் தற்பொழுது ஆட்சி பிடித்துள்ளனர் அண்ணாமலை போன்ற அனுபவம் இல்லாதவர்கள் அரைவேக்கட்டுத்தனமாக அவதூறு செய்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தமிழக மக்கள் மட்டுமல்லாத இந்திய மக்களே தீர்ப்பு தந்துள்ளனர். 

தற்போது நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் பாமக, பாரிவேந்தர்  டிடிவி தினகரன், சரத்குமார், ஓ பி எஸ், ஜான்பாண்டியன் ஆகியோர் கூட்டணி வைத்தனர். இருந்தும் கூட வாக்கு குறைந்துள்ளது. எடப்பாடியார் கண்ணாடி பார்க்க வேண்டும் என்று அண்ணாமலை கூறுகிறார் முதலில் அண்ணாமலை அவர் முகத்தை கண்ணாடியில் பார்க்கட்டும் அப்போதுதான் அவருக்கு புரியும் என்றார்.

click me!