குஜராத்தில் பாலை விற்று வருமானத்தை ஈட்டினார்கள்; இங்கு மதுவை விற்று வருமானம் ஈட்டப்படுகிறது - நீதிபதி வேதனை

By Velmurugan s  |  First Published Jul 6, 2024, 1:37 PM IST

குடியை விற்று அதன் மூலம் வரும் காசை வைத்து ஒரு அரசாங்கம் நடத்துவது என்பது கேவலமானது என்று  திருமாவளவன் பார்லிமென்டில் பேசியுள்ளதாக மதுரை தனியார் பள்ளியில்  நடைப்பெற்ற போதை விழிப்புணர்வு விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி பேச்சு.


மதுரை கோச்சடையில் உள்ள குயின் மீரா சர்வதேச பள்ளியில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. பள்ளியின் தலைவர் சந்திரன், நிர்வாக இயக்குனர் அபிநாத் சந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பாடலாசிரியர் மதன் கார்க்கி போதைபொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பாடலை எழுதி, ஜெரார்டு பெலிக்ஸ் இசையமைத்திருந்த இந்த பாடல் வெளியிடப்பட்டது. 

சிறப்பு விருந்தினர்களாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. நக்கீரன், செல்லமுத்து தொண்டு நிறுவனத்தின் தலைவர் ராமசுப்பிரமணியன், கே.ஜி.எஸ். ஸ்கேன்ஸ் உரிமையாளர் ஸ்ரீனிவாசன், போலீஸ் சூப்பிரண்டுகள் சிவபிரசாத்( தேனி), அரவிந்த்( மதுரை), ஐகோர்ட்டு வக்கீல் சாமிதுரை ஆகியோர் கலந்து கொண்டு, விழிப்புணர்வு பாடலை வெளியிட்டனர். 

Latest Videos

undefined

BSP மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. காவல்துறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு..

விழாவில், உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. நக்கீரன் பேசுகையில், சுடும் வரை நெருப்பு, சுற்றும் வரை பூமி, போராடும் வரை மனிதன். நீ மனிதன். இதை ஏன் சொல்கிறேன் என்றால் இது ஒரு பெரிய போராட்டம். இந்த போராட்டத்தை இந்த பள்ளி நிர்வாகம் கையில் எடுத்திருக்கிறது. இந்த போதை பொருள் விழிப்புணர்வு விழாவிற்கு நீதித்துறை, காவல்துறை, வழக்கறிஞர் துறை, மருத்துவர் துறை என அழைத்துள்ளார்கள். பெரும் வழக்கறிஞர்கள் எல்லாம் தனது தொழிலில் தோல்வி அடைந்ததற்கு காரணம் போதைப்பழக்கம்.

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்தால் அத்தனை அப்பாவி மக்கள் இறந்திருக்கிறார்கள். அதுக்கப்புறமும் அமைதியா இருக்கணுமா?  என்று பார்த்தால்... மனிதனாக இருந்தால் போராடு என்பார்கள். அந்தப் போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். இது பெரிய நெட்வொர்க். இதை ஒழிக்க காவல்துறை இரவு பகலாக பாடுபடுகிறார்கள். போதை பொருட்கள் சம்பந்தமான வழக்கில் என்னிடம் பெயில் வாங்குவது கஷ்டம்.

மாணவர்கள் நீங்கள் எல்லாரும் ஒவ்வொருவரும் whatsapp உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமாக மெஸெஜ் பண்ணுங்க. நீங்க உங்க குடும்பத்தினர்கள், நண்பர்கள் என ஒவ்வொருத்தருக்கும் விழிப்புணர்வு மெஸேஜ் பண்ணங்க. பரவலாக பண்ணுங்க. மாவட்டம் முழுவதும் பரவனும். தமிழ்நாட்டிலேயே இந்தப் பள்ளிதான் இதை முன்னெடுத்து இருக்கிறது என நினைக்கிறேன்.

நினைத்த படி.. அண்ணன் பிறந்த நாளில் ஆம்ஸ்ட்ராங்கை போட்டு தள்ளினோம்.. கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்!

இதை ஒழிக்க காவல்துறை முன்னெடுக்கனும், நீதித்துறையும் சேர்ந்திருக்கனும் அதோட வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் முன்னெடுக்கனும். நாங்கள் எல்லாம் இது குறித்து உங்களிடம் சொல்லவில்லை என்றால் வேறு யார் இதை சொல்வது? இப்ப உள்ள திரைப்படத்தில் எல்லாம் குடிப்பது போன்ற சீன் இல்லாமல் படங்களே இல்லை.  அதேபோல டிவியில் எல்லாம் குடிபழக்கம், புகை பழக்கம் உடலுக்கு கேடு என 20 முறையாவது விளம்பரம் வந்து விடுகிறது‌.  இது ஒரு சமுதாய சீரழிவு. 

குஜராத் மாநிலத்தில் அமுல் கம்பெனி பாலை விற்றதன் மூலமாக வருமானத்தை ஈட்டினார்கள். ஆனால் இவர்கள் சாராயத்தை விற்று வருமானத்தை ஈட்டுகிறார்கள். எது வளர்ச்சி என்றால் பாலை உற்பத்தி செய்து விற்று வளர்ச்சியடைந்தது தான் வளர்ச்சி. குடியை விற்று அதன் மூலம் வரும் காசை வைத்து ஒரு அரசாங்கம் நடத்துவது என்பது கேவலமானது என்று நான் சொல்லல திருமாவளவன் பார்லிமென்டில் பேசியுள்ளார் என்றார்.

click me!