மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும்; மதுரையில் ஆண்கள் மட்டும் பங்கேற்று 100 ஆடுகளை படையலிட்டு வழிபாடு

By Velmurugan sFirst Published Jul 5, 2024, 10:29 AM IST
Highlights

மேலூர் அருகே மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத திருவிழாவில் ஆடு மற்றும் கோழி பலியிட்டு நள்ளிரவில் அசைவ விருந்து பரிமாறப்பட்டது.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே புலிப்பட்டியில் உள்ள பொண் முனியாண்டி கோவில்  ஆண்டுதோறும் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி அனைத்து சமூகத்தினரும் கலந்து கொள்ளும் சமத்துவ திருவிழா நடைபெறுவது வழக்கம். குறிப்பாக இந்த திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்கள் மட்டுமே பங்கேற்பது ஐதீகம்.

ஆனி அமாவாசை; ராமேஸ்வரம் கடற்கரையில் திதி கொடுப்பதற்காக குவிந்த பொதுமக்கள்

Latest Videos

அந்த வகையில் இந்த ஆண்டும் மழை வேண்டி சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையொட்டி பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 100க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு, அதனை அசைவ விருந்தாக சமைத்து பொன்முனியாண்டி சுவாமிக்கு பாரம்பரிய முறைப்படி "முப்புளியன் பூஜை" எனும் படையலிட்டு   ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட ஆண்கள் மட்டுமே பங்கேற்று நள்ளிரவில் வழிபாடு நடத்தினர்.

விடாமல் துரத்தும் சிபிசிஐடி... ஓடி ஒளியும் எம்.ஆர் விஜயபாஸ்கர்-ஆதரவாளர்கள் வீட்டிற்குள் புகுந்து போலீஸ் ரெய்டு

இதனைத்தொடர்ந்து விழாவில் பங்கேற்ற, ஆண்கள் அனைவருக்கும்  இரவில் அசைவ விருந்து பரிமாறப்பட்டது. இந்நிகழ்வில் சுற்றுவட்டார கிராமப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டு வழிப்பாடு செய்தனர். 

click me!