தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வில் வெளிப்படைதன்மை இல்லை என கூறி தலைமை ஆசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை கல்வி மாவட்ட தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு மதுரை மாவட்டம் நரிமேடு ஓ.சி.பி.எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது. இதில் ஊராட்சி ஒன்றிய பள்ளி, ஆதிதிராவிடர் பள்ளி, கள்ளர் சீரமைப்பு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி என 100க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான திறந்தவெளி கலந்தாய்வு காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
undefined
மதுரை கிழக்கு ஊராட்சி பொட்டப்பனையூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாறுதலானது திறந்தவெளி கலந்தாய்வு துவங்குவதற்கு முன்னரே ஒதுக்கீடு நடந்துள்ளது எனக் கூறி கலந்தாய்வுக்கு வந்த தலைமை ஆசிரியர்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட (CNG) அரசு பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வில் அரசியல் தலையீடு இருப்பதாக சந்தேகம் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பாக நடைபெற்ற ஒதுக்கீட்டு ஆணையை ரத்து செய்ய வேண்டும் எனவும், கலந்தாய்வு மையத்தில் தலைமை ஆசிரியர்கள் கண்டன முழக்கம் எழுப்பினர். தலைமை ஆசிரியர்களின் புகாருக்கு பதில் அளிக்க முடியாமல் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் திணறினர். தொடர்ந்து தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில் மறுபுறம் தலைமை ஆசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கலந்தாய்வு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்து.