Madurai: மதுரையில் படிக்கட்டில் பயணம்; இறக்கி விடப்பட்ட இளைஞர்; இறுதியில் நடந்தது இதுதான்!!

By Velmurugan s  |  First Published Jul 9, 2024, 2:48 PM IST

மதுரை மாவட்டம் மேலூர் அருகே படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர் பாதியில் இறக்கிவிடப்பட்டதால் ஆத்திரமடைந்து பேருந்து கண்ணாடியை சேதப்படுத்திய சம்பவம் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


மதுரை மாவட்டம், மேலூருக்கு சிவகங்கையில் இருந்து பயணிகளுடன் அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இதில் 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் படிக்கட்டில் நின்று கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பேருந்தின் நடத்துநர் மற்றும் பயணிகள் அவரை எச்சரித்துள்ளனர். ஆனால் அவற்றை பொருட்படுத்தாத இளைஞர் மீண்டும் படிக்கட்டில் நின்றுக்கொண்டு பயணித்துள்ளார். 

சர்வாதிகாரத்தோடு, தெனாவெட்டாக அவர மாதிரி நான் பேசமாட்டேன்; ஈபிஎஸ் குறித்த கேள்விக்கு பழனிசாமி பதில்

Tap to resize

Latest Videos

undefined

இதனால் எரிச்சலடைந்த நடத்துநர் அந்த இளைஞரை இடையமேலூர் அருகே உசிலம்பட்டி பகுதியில் இறக்கி விட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் இருசக்கர வாகனத்தில் பேருந்தை பின் தொடர்ந்து வந்து, மேலூர் ஆர்.சி பள்ளி அருகே பேருந்தை வழி மறித்து கல் எரிந்து பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி சென்றுள்ளார்.

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; இருவர் உடல் கருகி பலி, இருவர் படுகாயம்

இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த மேலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பேருந்தை சேதப்படுத்திய இளைஞரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பேருந்தில் பாதுகாப்பாக பயணம் செய்ய அறிவுறுத்தியதால் இளைஞர் பேருந்தை சேதப்படுத்திய சம்பவம் சக பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

click me!