சுமார் மூஞ்சி குமார் விஜய்..! பீகார்ல பிறந்து இருந்தா நடிகராக முடியுமா? திமுக ராஜீவ் கேள்வி!

Published : Jul 23, 2025, 07:21 PM IST
Tamilndu Politics

சுருக்கம்

தவெக தலைவர் நடிகர் விஜய்யை திமுகவின் ராஜீவ் காந்தி விமர்சனம் செய்துள்ளார். சுமார் மூஞ்சி குமார் விஜய் என்று அவர் கடுமையாக பேசியுள்ளார். 

DMK's Rajiv Gandhi Severely Criticized TVK Actor Vijay: தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, மத்தியில் ஆளும் பாஜக, நடிகர் விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதில் அதிமுக, பாஜக கூட்டணியை உறுதி செய்து விட்டன. திமுகவை பொறுத்தவரை காங்கிரஸ், விசிக உள்ளிட்ட ஏற்கெனவே இருக்கும் கூட்டணி கட்சிகளை தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறது.

நடிகர் விஜய்யின் அரசியல்

சட்டப்பேரவை தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கட்சி நடிகர் விஜய்யின் தவெக தான். தமிழ்நாட்டில் அதிமுக, திமுக ஆகியவை திராவிட கொள்கையை கொண்டுள்ளன. பாஜக தேசிய கொள்கையை பின்பற்றுகிறது. நாம் தமிழர் கட்சி தமிழ் தேசிய அரசியலை முன்னிலைப்படுத்தி வருகிறது. ஆனால் திராவிடம், தமிழ் தேசியம் என இரண்டையும் முன்னிலைப்படுத்தி அரசியல் செய்து வரும் ஒரே கட்சி தவெக தான். திராவிடத்தின் சில கொள்கைகளை கையில் எடுத்துள்ள விஜய், மாநில உரிமை குறித்தும் அழுத்தம் திருத்தமாக பேசத் தொடங்கியுள்ளார்.

விஜய்யை விமர்சிக்கும் திமுக

திமுகவின் ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று சூளுரைத்து வரும் விஜய், தமிழ்நாட்டின் உரிமைகளை பறிப்பதாக கூறி பாஜகவையும் கடுமையாக தாக்கி வருகிறார். ஒருபக்கம் அதிமுக கூட்டணிக்கு அழைத்து வரும் நிலையில், பாஜகவுடன், திமுகவுடன் ஒருபோதும் கூட்டணியில்லை என விஜய் திட்டவட்டமாக உள்ளார். இதனால் விஜய்யை திமுக கடுமையாக தாக்கி வருகிறார். ''விஜய் களத்துக்கே வரவில்லை. வீட்டில் இருந்து அரசியல் செய்து வருகிறார். ஆனால் நாங்கள் மக்களுக்காக பார்த்து பார்த்து திட்டங்களை தீட்டி வருகிறோம்'' என திமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

சுமார் மூஞ்சி குமார் விஜய்

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் சுமார் மூஞ்சி குமார் என்று திமுகவின் மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி தாக்கி பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ''ஒருவேளை பீகாரில் பிறந்திருந்தால், உத்தரபிரதேசத்தில் பிறந்திருந்தால் நடிகர் விஜய் என்னவாகியிருப்பார்? ஒரு கற்பனை. என்னவாகிருப்பார்? என யோசித்து பாருங்கள். தமிழ்நாட்டில் ஏதோ ஒரு மூலையில் பிறந்து சுமார் மூஞ்சி குமாராக இருந்தாலும் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவுக்கு நடிகர் விஜய் உயர்ந்துள்ளார்.

இந்தி பேசாத மாநிலங்களில் சினிமா உள்ளதா?

பெருமரியாதைக்குரிய ஏகே, நடிகர் விஜய் சேதுபதி, எங்களுடைய எப்போதும் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், எங்கள் இசைக் கடவுள் இளையராஜா, எங்கள் ஏர்.ஆர்.ரகுமான், எங்கள் வைரமுத்து, எங்கள் அக்கா தாமரை உள்பட எத்தனையோ கவிஞர்களுக்கு சினிமா ஆசை உள்ளது. வாய்ப்பு உள்ளது. ஆனால் ஜார்கண்ட்டில், பீகாரில், உத்தரபிரதேசத்தில், மத்திய பிரதேசத்தில், டெல்லியில் சினிமா உள்ளதா? ஏன் இல்லை தெரியுமா? இந்தி என்ற ஒரு மொழியை கொண்டு வந்து எங்கள் மீது திணித்தபோது பெரியார் இந்தி கூடாது என கடுமையாக எதிர்த்தார்.

இந்தி வந்தால் கல்வி, வேலைவாய்ப்பு போகும்

இந்தி வந்தால் சமுகம் போகும், கல்வி போகும், வேலைவாய்ப்பு போகும். சினிமாவை வாழ்நாள் முழுவதும் பெரியார் திட்டினார். பெரியார் எங்கள் தமிழை பாதுகாத்ததால், இலக்கியங்களை பாதுகாத்ததால் தமிழ் சினிமாவை இந்தி தீண்ட முடியாவில்லை. ஆனால் அதே வேளையில் உ.பி, பீகார், ஜார்க்கண்ட் மக்கள் இந்தி படித்தால் முன்னேறலாம் எனக்கூறி தங்களது தாய்மொழி சாந்தலி, போஜ்புரி, மார்வாடியை மறந்து விட்டு இந்தி படித்தான். 8ம் கிளாஸ், 9ம் கிளாஸ் படித்து அவன் பாடம் மண்டையில் ஏறவில்லை. ஆகையால் இந்தியை எதிர்த்த தமிழ்நாட்டுக்கே பிழைப்பு தேடி வந்து விட்டான்'' என்று தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்