ரூ.4034 கோடி நிதியை வழங்காமல் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசு! போராட்டத்துக்கு நாள் குறித்த திமுக!

100 நாள் வேலை உறுதி திட்ட நிதி ரூ.4034 கோடியை வழங்காத ஒன்றிய அரசைக் கண்டித்து திமுக போராட்டம் அறிவித்துள்ளது. 

DMK protests across the state condemning the Union government

100 நாள்  வேலை உறுதி திட்டத்தின் (MGNREGA) மூலம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி நிதியை வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து திமுக போராட்டத்தை அறிவித்துள்ளது. 

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்

Latest Videos

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், மார்ச் 09ம் தேதி அன்று காலை, சென்னை, அண்ணா அறிவாலயம், கழக அலுவலகத்தில்  நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில்" கழக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும்போது, “தமிழ்நாடு மாநில நலன் குறித்து கேள்விகள் எழுப்பி, அதற்குரிய பதிலை ஒன்றிய அரசிடம் பெற வேண்டும்” என்றும்;  அத்துடன் ‘ஒன்றிய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட(MGNREGA) நிதியை வழங்காதது’ குறித்து கேள்வி எழுப்பிட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

இதையும் படிங்க: 11 விவசாயிகளுக்கு ரூ.8.25 பரிசுத்தொகையை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!

 திமுக சார்பில் கண்டன  ஆர்ப்பாட்டம்

கழகத் தலைவர் அறிவுரைக்கிணங்க, “ஒன்றிய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட(MGNREGA) நிதியை வழங்காதது குறித்து மார்ச் 25ம் தேதி அன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள்   கேள்வி எழுப்பிய போது, அதற்கு எவ்வித பதிலையும் தராமலும் -   தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட (MGNREGA) நிதியை வழங்காமலும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து திமுக சார்பில்  மார்ச் 29ம் தேதி சனிக்கிழமை அன்று காலை அனைத்து கழக ஒன்றியங்களிலும் தலா இரண்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் 100 நாள் வேலைவாய்ப்பால் பயன்பெறுவோரைத் திரட்டி “மாபெரும்  கண்டன  ஆர்ப்பாட்டம்”நடைபெறும்.

இதையும் படிங்க:  தமிழகத்தில் புதிய காவல் நிலையங்கள்.! முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய தகவல்

ஒன்றிய பாசிச பாஜக அரசு

மாவட்டக் கழக நிர்வாகிகள் - கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில்,  கழக முன்னணியினர் முன்னிலையில் நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் - நிர்வாகிகள்,  அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்ற வகையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்து, தமிழ்நாடு அரசை வஞ்சிக்கும் ஒன்றிய பாசிச பாஜக அரசுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்த விவரத்தை தலைமைக் கழகத்திற்கு உடனே தெரிவித்திட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

vuukle one pixel image
click me!