மதுரை திமுக எம்எல்ஏ வீட்டு முன் தீக்குளித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆளுநர் ரவியை கண்டித்து தீக்குளிக்க முயன்ற இவர், திமுக தலைமை தன்னை கண்டுகொள்ளவில்லை என வேதனை தெரிவித்திருந்தார்.
திமுக நிர்வாகி தீக்குளிப்பு
மதுரையின் திமுகவின் முக்கிய தலைவராக இருப்பவர் தளபதி, இவர் மதுரை மாநகர மாவட்ட செயலாளராகவுள்ளார். இவரது வீடு திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ளது. நேற்று மானகிரி பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் எம்எல்ஏ வீட்டிற்கு வந்து பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென வீட்டின் வெளியே வந்தவர் யாரும் எதிர்பார்க்காத நிலையில் பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தனக்கு தானே தீ வைத்துக்கொண்டார்.
கணேசனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டர். ஒரு கட்டத்தில் தீயை அணைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது கணேசனின் உடலில் 90% தீக்காயம் ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி கணேசன் உயரிழந்தார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கணேசன் கடந்த ஆண்டு மதுரை சிம்மக்கல்லில் உள்ள கருணாநிதி சிலை முன்பாக தமிழக ஆளுநர் ரவியை கண்டித்து தீக்குளிக்க முயன்றார். அப்போது உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். திமுகவிற்காக தான் உயிர் தியாகம் செய்ய நினைத்த நிலையிலும் திமுக தலைமை தன்னை கண்டுகொள்ளவில்லையென வேதனையில் இருந்துள்ளார்.
அமைச்சர்கள் யாரும் தன்னை வந்து சந்திக்கவில்லையென திமுக தலைமைக்கு புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் தான் மதுரை மாவட்ட செயலாளரும், திமுக எம்எல்ரவான தளபதி வீடு முன் தீக்குளித்து தனது உயிரை கணேசன் மாய்த்துக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உச்சகட்ட மோதல்.! பாஜகவில் ஜெயிக்கப் போவது அண்ணாமலையா.? தமிழிசையா.?