மின்சாரத்துறை அமைச்சருக்கேவா இப்படி? அடுத்தடுத்து கட்டான மின்சாரம்; கடுப்பான முன்னாள் அமைச்சர்

By Velmurugan sFirst Published Aug 29, 2024, 10:44 PM IST
Highlights

அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தனது தொகுதியில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேச முற்பட்டபோது தொடர்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் கோபம் அடைந்தார்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள செந்துறை, ரெங்கை சேர்வைக்காரன் பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.39 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான கட்டிடங்கள் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக சேர்ந்த முன்னாள் மின்சாரத்துறை அமைச்சரும், நத்தம் சட்டமன்ற உறுப்பினருமான நத்தம் விசுவநாதன் கலந்து கொண்டு திறந்து வைப்பதற்காக வந்தார். 

இந்த நிலையில் முதலாவதாக செந்துறை பகுதியில் அமைந்துள்ள ரூ.15 லட்சம் மதிப்பிலான  புதிய நியாய விலைக் கடையை திறந்து வைத்து மைக்கில் பேச தொடங்கிய போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பொதுமக்களிடம் மைக் இல்லாமல் பேசிவிட்டு அடுத்த கிராமத்திற்கு காரில் சென்றார். அதைத்தொடர்ந்து பெரியூர் பட்டியில் உள்ள ரூ.10 லட்சம் மதிப்பிலான நாடக மேடையை திறப்பதற்காக வந்தபோது ஸ்பீக்கரில்  அதிமுக கட்சி பாடல் பாடிக் கொண்டிருந்தது.  

Latest Videos

திருப்பதியில் லட்டு வாங்க இன்று முதல் ஐடி கட்டாயம்; தேவஸ்தானம் அறிவிப்பு

நிகழ்ச்சியில் ரிப்பன் வெட்டி நாடகமேடையை திறந்து வைத்து மேடையில் மைக்கை பிடித்து பேச முயன்றபோது மீண்டும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்பொழுதும் பொது மக்களிடையே மைக் இல்லாமல் பேசிவிட்டு அடுத்த ரெங்கசேர்வைக்காரன்பட்டிக்கு நியாய விலை கடை திறப்பதற்காக சென்றார். அங்கும் மின்சாரம் வினியோகம் நிறுத்தப்பட்டிருந்தது.

நீங்க வந்தா மட்டும் போதும்; விராட், ரோகித்க்கு பாக். முன்னாள் வீரர் அழைப்பு

இதனால் கடுப்பான  சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விசுவநாதன் பொதுமக்களிடையே  திமுகவினர் வேண்டுமென்றே செய்கிறார்கள். இதுதான் திமுக ஆட்சி  என்றாலே மின்தடை என்பது பழக்கமாகிவிட்டது. என்று மைக் இல்லாமல் பொதுமக்களிடம் பேசினார். மூன்று நிகழ்ச்சியை முடித்துவிட்டு திரும்பினார். அதைத் தொடர்ந்து அங்குள்ள கட்சியை சேர்ந்தவர்கள் மின்தடை அறிவிப்பு இல்லாமல் மைக்கை தொட்டவுடன் மின்சாரத்தை துண்டிக்கிறார்கள் என புலம்பிக் கொண்டே சென்றனர்.   முன்னாள் மின்துறை அமைச்சருக்கு சோதனையா? என பொதுமக்கள் வினவினர்.

click me!