திண்டுக்கல்லில் தோட்டத்திற்குள் நுழைந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடுத்த சாலக்கடை பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையன் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் என சொல்லப்படுகிறது. இதனிடையே திண்டுக்கல் மாவட்டம் தவசிமடையைச் சேர்ந்த சவேரியார் சாலக்கடை பகுதியில் தோட்டம் வைத்து பராமரித்து வருகிறார்.
இந்நிலையில், வெள்ளையன் அடிக்கடி சவேரியார் தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்து பழங்களை பறித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வெள்ளையன் குடும்பத்திற்கும், சவேரியாருக்கும் இடையே தொடர்ந்து விரோதம் நீடித்து வந்துள்ளது. இதனிடையே இன்று அதிகாலை 3 மணியளவில் வெள்ளையன் சவேரியாரின் தோட்டத்தின் வழியாக நடந்து சென்றதாக சொல்லப்படுகிறது.
undefined
பள்ளியில் விழுந்து கிடந்த பழங்களை சாப்பிட்ட மாணவனுக்கு நேர்ந்த சோகம்; சக மாணவர்கள் கதறல்
அப்போது வெள்யைனுக்கும், சவேரியாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சவேரியார் தான் மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியை எடுத்து வெள்ளையனை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார். இதில் கழுத்து, தோள்பட்டை, முதுகு பகுதிகளில் பலத்த காயமடைந்த வெள்ளையனை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ரூமுக்குள் பார்பிகியூ சிக்கன்; சுற்றுலா வந்த இடத்தில் இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்
வெள்ளையனின் உடல்நிலை மோசமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் தலைமறைவாக உள்ள தோட்ட உரிமையாளர் சவேரியாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.