கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற இளைஞர்கள் அறைக்குள் பார்பிகியூ சிக்கன் சமைத்து சாப்பிட்ட நிலையில் இருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரழப்பு.
சென்னையைச் சேர்ந்த 4 இளைஞர்கள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். கொடைக்கானல் சின்னப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இரு அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர். ஒரு அறையில் ஜெயக்கண்ணனும், அருண்பாபுவும் தங்கியிருந்தனர். மற்றொரு அறையில் சிவசங்கர், அவரது சகோதரர் சிவராஜ் ஆகியோர் தங்கி உள்ளனர்.
இந்நிலையில் இளைஞர்கள் 4 பேரும் தாங்கள் தங்கயிருந்த அறையிலேயே கோழிக்கறியை சுட்டு சாப்பிட்டுள்ளனர். பின்னர் அதே நெறுப்பை பயன்படுத்தி அறையினுள்ளேயே குளிர் காய்ந்ததாகக் கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து சிவசங்கரும், சிவராஜ்ம் வேறொரு அறைக்கு உறங்கச் சென்றுள்ளனர். பின்னர் மறு நாள் காலையில் மீண்டும் பக்கத்து அறைக்கு சென்று பார்த்த போது அறையினுள் கடுமையான புகைமூட்டமாக இருந்துள்ளது. மேலும் அந்த அறையில் தங்கியிருந்த ஜெயக்கண்ணன், அருண்பாபு இருவரும் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர்.
undefined
இதனைத் தொடர்ந்து உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டது. அப்போது இளஞர்களை பரிசோதித்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், இளைஞர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இளைஞர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தங்கலான் பட பிரமோஷன் மொத்தமாக நிறுத்தம்; காரணத்தை கேட்டா உங்களுக்கே புல்லரிச்சிடும்
இது தொடர்பாக காவல் துறை தரப்பில் கூறுகையில், சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்த இளைஞர்கள் சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் மூடிய அறைக்குள் அடுப்பு கரியை பயன்படுத்தி குளிர் காய்ந்துள்ளனர். இதில் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.