கேப்டன் விஜயகாந்த் ஸ்டைலில் மொய் விருந்து; வயநாடு மக்களுக்காக ஒன்றுகூடிய திண்டுக்கல் வாசிகள்

By Velmurugan s  |  First Published Aug 8, 2024, 12:22 AM IST

நிலச்சரிவில் உறவுகள், உடைமைகளை இழந்து தவிக்கும் வயநாடு மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற மொய் விருந்து நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.


கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி, பொருள் உதவி அளிக்கும் வகையில், திண்டுக்கல் முஜீப் பிரியாணி, திண்டுக்கல் ஹோட்டல் அசோசியேஷன் மற்றும் திண்டுக்கல் ரோட்டரி சங்கம் இணைந்து பாரம்பரிய முறைப்படி மொய் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இது தொடர்பாக சுற்றுவட்டார மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மொய் விருந்தானது புதன் கிழமை இரவு 8 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது.

நாவல் பழத்திற்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட 3 பிஞ்சு குழந்தைகள்; விழுப்புரத்தில் சோகம்

Latest Videos

undefined

இந்த மொய் விருந்தில் தோசை, புரோட்டா, சிக்கன் பிரியாணி மற்றும் நெய் சாதம் ஆகியவை பரிமாறப்பட்டன. மேலும் மொய் விருந்தில் பங்கேற்றவர்கள் சாப்பிட்டு முடித்த பின் இலைக்கு அடியில் தங்களால் முடிந்த உதவித்தொகையை  வைத்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி உணவு சாப்பிட்டுவிட்டு நிவாரண உதவி தொகையை இலைக்கு அடியிலும், கடை முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியலிலும் செலுத்தினர்.

 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; பள்ளி HMஐ உள்ளாடையோடு இழுத்து வந்த மக்கள்

இதில் ஒரு சிறுவர் உண்டியலில் சிறுக சிறுக சேர்த்து வைத்த சில்லறை காசுகளை நிவாரண நிதிக்காக உண்டியலில் செலுத்தினார். இது போன்று மொய் விருந்து மூலம் கிடைக்கப்பெற்ற பணம் வயநாடு நிவாரணத்திற்காக அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மொய் விருந்து நடைபெறும் கடையில் வெளியே 7 மணி முதல் பொதுமக்கள் கூடினர். மேலும் இந்த மொய் விருந்தில் திண்டுக்கல்லை  சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது உதவி மனப்பான்மையை வெளிப்படுத்தினர்.

click me!