திண்டுக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் இரு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ரெண்டலப்பாறை பகுயைச் சேர்ந்தவர் ஜார்ஜ். எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இதனிடையே இவரது மனைவி அருணா, மகன் ரக்சன் ஜோ, மகள் ரக்ஷிதா ஆகிய நாள்வரும் ஒரே இருசக்கர வாகனத்தில் ரெண்டலப்பாளையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
சிறுவனின் உயிரை குடித்த ஆன்லைன் கேம்; தற்கொலைக்கு ப்ளூ பிரிண்ட் தயாரித்து விபரீத முடிவு
undefined
அப்பொழுது நல்லாம்பட்டி பிரிவு அருகே எதிர் திசையில், திண்டுக்கல்லில் இருந்து நத்தம் நோக்கி சென்ற கார் ஒன்று திடீரென சாலையின் குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பிரேக் பிடித்த நிலையில், கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியன் மீது மோதி ஜார்ஜின் இருசக்கர வாகனத்தில் பயங்கரமாக மோதியது.
நாகையில் அரசு காப்பகத்தில் ஒரே நாளில் 8 சிறுமிகள் மாயம்; கடத்தல் கும்பல் கைவரிசை?
இந்த விபத்தில் ஜார்ஜ் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக திண்டுக்கல் தெற்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.