திண்டுக்கல் காங்கிரஸ் கட்சி சார்பாக மத்திய பட்ஜெட் தாக்கல் குறித்து பொதுமக்களுக்கு அல்வா வழங்கியும், நாமம் இட்டும் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2024 - 25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய அரசு அண்மையில் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில் தமிழகம் உட்பட எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.
திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் ரொமான்ஸ்; ரூ.13000 அபராதம் விதித்த போலீஸ்
undefined
மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக நாகல் நகர் பகுதியில் மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசுக்கு நிதி ஒதுக்காதது குறித்து திண்டுக்கல் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அமெரிக்க அதிபர் தேர்தல்; ஓங்கும் கமலா ஹாரிசின் கை - முன்னாள் அதிபர் ஒபாமா ஆதரவு கரம்
அப்போது, காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு அல்வா வழங்கியும், நாமம் இட்டும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, ஆட்சியை காப்பாற்றுவதற்காக பாஜக அரசு பீகார் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு அதிகமான அளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என குறிப்பிட்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.