நத்தம் அருகே குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை சாதுர்யமாக பிடித்து போலீசில் ஒப்படைத்த மக்கள்

By Velmurugan sFirst Published Jul 9, 2024, 11:07 PM IST
Highlights

நத்தம் அருகே கோவில் திருவிழாவில் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை சாதுர்யமாக பிடித்த பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்து, அவரிடம் இருந்து குழந்தையை மீட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் அழகுபட்டியைச் சேர்ந்தவர்கள் மாரியம்மாள் - சூர்யா தம்பதி. இவர்களுக்கு பாண்டீஸ்வரி  (வயது 2) என்ற பெண் குழந்தையும், 7 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அவரது பெரியம்மா பாண்டியம்மாள் என்பவருடன் பால்குடம் எடுத்து வந்துள்ளனர். 

குழந்தையை கோவிலுக்கு வெளியே நிறுத்திவிட்டு பாலை கம்பத்தில் ஊற்றி வர சென்று மீண்டும் கோவிலுக்கு வெளியே வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த முருகாயி என்பவர் குழந்தையை தூக்கி வைத்திருந்ததாக தெரிவித்தனர். 

Latest Videos

Crime: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொடூர கொலை; 65 சவரன் நகைக்காக உயிரை கொன்ற கொள்ளையர்கள்

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோபால்பட்டிக்கு வந்த பேருந்தில் இருந்து ஒரு பெண்மணி கை குழந்தையுடன் கீழே இறங்கி உள்ளார். அப்போது அந்த குழந்தையின் வாயை பொத்தியபடியே தூக்கி வந்துள்ளார். அந்த பெண்மணியின் உடைகள் அனைத்தும் அழுக்கு படிந்த நிலையில் இருந்ததை பார்த்து சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அவரிடம் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்டனர். இந்த குழந்தை யாருடையது என கேட்டுள்ளனர். 

அப்போது அந்த பெண் இந்த குழந்தை எனது பேத்தி என முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். ஆனால் குழந்தையோ இந்த பெண்மணியை கண்டு மிகுந்த அச்சத்தில், மிரட்சியில் இருந்துள்ளது. உடனடியாக சாணார்பட்டி  காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அங்கு வந்த காவல் துறையினர் குழந்தையை காவல் நிலையம் கொண்டு சென்றனர். குழந்தையை கடத்தி வந்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து தாக்கினார். இது குறித்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது.

சர்வாதிகாரத்தோடு, தெனாவெட்டாக அவர மாதிரி நான் பேசமாட்டேன்; ஈபிஎஸ் குறித்த கேள்விக்கு பழனிசாமி பதில்

குழந்தையை காணவில்லை என தாய் மாரியம்மாள் திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றுள்ளார்.  அப்போது அங்கிருந்த காவலர்கள் தற்போது வாட்ஸ் அப் குழுக்களில் குழந்தை ஒன்று சாணார்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் இருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த குழந்தை உங்களுடையதா என்று பாருங்கள் என்று புகைப்படத்தை காட்டியுள்ளனர். புகைப்படத்தை பார்த்த தாய் மாரியம்மாள் இது என்னுடைய குழந்தை தான் என்று சொல்லி சாணார்பட்டி மகளிர் காவல் நிலையம் விரைந்து வந்து அவரது குழந்தையை தன்னுடன் அழைத்துச் சென்றார்.

தாயைப் பார்த்ததும் மகளிர் காவலரிடம் இருந்த குழந்தை மகிழ்ச்சியுடன் தாயுடன் சென்ற காட்சி காண்போரை நெகிழச் செய்தது. சேயை தாயுடன் சேர்த்த சாணார்பட்டி மகளிர் காவலர்களை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். குழந்தையை தூக்கி வந்த பெண்மணி சிறிது மனநிலை சரியில்லாதவராக இருந்ததால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் விட்டுச்சென்றனர்.

click me!