Crime: தாய் கண் முன்னே வெட்டி சாய்க்கப்பட்ட ரௌடி; திண்டுக்கல்லில் கொலைக்கு பழி தீர்த்த மர்ம கும்பல்

By Velmurugan s  |  First Published Jul 8, 2024, 12:31 PM IST

திண்டுக்கல்லில் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ரௌடி தாய் கண் முன்னே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டியில் இருந்து மொட்டணம்பட்டி செல்லும் சாலையில் உள்ள டிவைன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி மஞ்சுளா இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இவர் சுள்ளான் என்பவரை கடந்த 2020ம் ஆண்டு வெட்டி படுகொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்பொழுது ஜாமினில் வெளியே வந்துள்ளார். 

மேலும் திண்டுக்கல்லில் இருந்தால் எதிரிகளால் தனது உயிருக்கு ஆபத்து வரும் என்பதை உணர்ந்து திருப்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளை திருப்பூர் அழைத்துச் செல்வதற்காக தனது வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று இரவு தனது வீட்டில் தாய், அக்காவுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்.  

Tap to resize

Latest Videos

undefined

தெரு தெருவாக சைக்கிளில் பேப்பர் போட்ட என்னை சுப்ரீட் ஸ்டாராக உயர்த்தியது நீங்கள் தான் - விக்கிரவாண்டியில் சரத்குமார் பேச்சு

அப்பொழுது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் திடீரென்று வீட்டுக்குள் புகுந்து தாய் கண்முன்னே வினோத்தை வெட்டி படுகொலை செய்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீசார் வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.5 லட்சத்தை இழந்த விசைத்தறி தொழிலாளி விரக்தியில் விபரீத முடிவு

கொலை நடந்த இடத்தில் காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். நேற்று முன்தினம் வேடப்பட்டி பகுதியில் கூலித்தொழிலாளி பாண்டி என்பவர் மது போதையில் ஏற்பட்ட தகராறில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பெரும் அச்சத்தில் இருந்த பொதுமக்களை தற்போது 48 மணி நேரத்தில் மேட்டுப்பட்டி பகுதியில் வினோத்குமார் என்பவர் வீடு புகுந்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் மேலும் அச்சத்திலும், அதிர்ச்சியிலும் பொதுமக்கள் உறைந்துள்ளனர்.

click me!