கஞ்சா புகைத்து மட்டையாவது எப்படி? என வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் - கொத்தாக அள்ளிசென்ற போலீஸ்

By Velmurugan s  |  First Published Jul 6, 2024, 10:21 AM IST

பழனியில் கஞ்சா புகைப்பது போன்று ரிலீஸ் வெளியிட்ட இளைஞர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள கஞ்சா வியாபாரியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் கஞ்சா புகைத்து போதையில் விழுந்து கிடப்பது போல இளைஞர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். இந்த வீடியோ வைரலாகி பொதுமக்கள் பலரும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். 

Amstrong: பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை; நண்பனின் இழப்பை தாங்காமல் கதறி துடித்த பா.ரஞ்சித்

Tap to resize

Latest Videos

undefined

இதனை அடுத்து இணையத்தில் வீடியோ வெளியிட்ட நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் அடிப்படையில் தனிப்படையினர் அமைக்கப்பட்டு கஞ்சா வியாபாரியை போலீஸார் தேடிவந்தனர். இந்த நிலையில்  பழனியை அடுத்த பாலசமுத்திரத்தைச் சேர்ந்த சிவக்குமார், மகாபிரபு, கார்த்தி, பாலசுப்ரமணியன், ராம்குமார், மதன்குமார் ஆகிய 6 நபர்களை போலீஸார் கைது செய்தனர். 

Shocking Video: தஞ்சையில் மரண பீதியை ஏற்படுத்திய தனயார் பேருந்து ஓட்டுநர்; உயிர் பயத்தில் அலறிய பயணிகள்

அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் கஞ்சா புகைக்க பயன்படுத்திய பொருட்கள் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கஞ்சா புகைக்கும் ரீல்ஸ் வீடியோ சம்பந்தமாக பாலசமுத்திரத்தைச் சோந்த மணிகண்டன், மதி  மற்றும் கஞ்சா விற்பனையில் தொடர்புடைய பாலசமுத்திரத்தைச் சோந்த பாஸ்கர் மற்றும் முத்துராஜா ஆகியோர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

click me!