டிஐஜி விஜயகுமார்.. உடலை தோளில் சுமந்து சென்ற டிஜிபி சங்கர் ஜிவால் - 21 குண்டுகள் முழங்க உடல் தகனம்!

By Ansgar R  |  First Published Jul 7, 2023, 7:49 PM IST

கடந்த 2009ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற விஜயகுமார், காவல்துறை பணியில் இணைந்தார்.


கோவை டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு தமிழகம் முழுவதும் மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தற்கொலையின் பின்னணியில் என்ன இருக்கிறது என்பதை தமிழக அரசு விசாரணை நடத்தி விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார். 

கடந்த 2009ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற விஜயகுமார், காவல்துறை பணியில் இணைந்தார். காஞ்சிபுரம், நாகப்பட்டினம், கடலூர் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட கண்காணிப்பாளராக இவர் பணியாற்றியுள்ளார். சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்தவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வந்தார் விஜயகுமார்.

Latest Videos

இதையும் படியுங்கள் : 1000 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்த விஜயகுமார்..! ஐபிஎஸ் ஆனது எப்படி.? கண் கலங்க வைக்கும் பழைய பதிவு

இந்த சூழலில் தான் இன்று காலை தனது வழக்கமான உடற்பயிற்சியை முடித்துவிட்டு கோவையில் உள்ள முகாம் அலுவலகத்திற்கு அவர் வந்தார். பாதுகாவலர் ரவி என்பவருடைய துப்பாக்கியை வாங்கி அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்று மதியம் அவருடைய உடல் விஜயகுமாரின் சொந்த ஊரான தேனிக்கு எடுத்து செல்லப்பட்டபொழுது அவரின் உடலை பார்த்து அவரது தாய் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுத்த காட்சி மாபெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தமிழ்நாடு டிஜிபியாக சில தினங்களுக்கு முன்பு பொறுப்பேற்ற சங்கர் ஜிவால் உள்ளிட்ட பல உயரதிகாரிகள் அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வந்தனர். 

இறுதியாக டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் பிற காவல் அதிகாரிகள் அவர் உடலை தோளில் சுமந்து செல்ல, 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விஜயகுமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள் : தேனி வந்தடைந்த டிஐஜி விஜயகுமரின் உடல் - அதிகாரிகள் கண்ணீர் மல்க அஞ்சலி!

click me!