தஞ்சை அருகே எர்ணாகுளம் விரைவு ரயிலை கவிழ்க்க சதி? தண்டவாளத்தில் டயர் வைக்கப்பட்டதால் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Jul 7, 2023, 6:07 PM IST

எர்ணாகுளம் விரைவு ரயில் வரும் நேரத்தில் திருச்சி - தஞ்சை இடையே தண்டவாளத்தில் டயர் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ரயிலை கவிழ்க்க சதி நடைபெற்றுள்ளதா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

two wheeler tyre found railway track near trichy

காரைக்காலில் இருந்து நாகை, திருச்சி வழியாக தினந்தோறும் கேரளாவுக்கு எர்ணாகுளம் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல் நேற்று இரவு எர்ணாகுளத்தில் இருந்து 10.30 மணிக்கு காரைக்காலுக்கு எர்ணாகுளம் விரைவு ரயில் புறப்பட்டது. கோயம்புத்தூர், ஈரோடு  வழியாக  திருச்சிக்கு  இன்று காலை காலை 8.05 மணிக்கு வந்தடைந்தது. அங்கு ரயிலின் இஞ்சின் மாற்றி அமைத்து காரைக்காலில் நோக்கி புறப்பட்டது. 

9 மணிக்கு தஞ்சாவூர் ரயில்வே நிலையம் உள்ளே நுழையும் போது ரயிலை பரிசோதனை செய்ய ரோலிங் மெக்கானிக் கருப்பையா மற்றும் வெங்கடேஷ் இருபுறமும் சோதனை செய்தனர். அப்போது எஸ் 9, எஸ் 10 பெட்டிகளுக்கு இடையில் இருசக்கர வாகனத்தின் டயர் சிக்கி இருப்பதைக் கண்டு பிடித்தனர். இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவசர அவசரமாக ரயிலை நிறுத்தியுள்ளனர். 

Tap to resize

Latest Videos

தேனி வந்தடைந்த டிஐஜி விஜயகுமரின் உடலுக்கு அமைச்சர், டிஜிபி உள்பட அதிகாரிகள் கண்ணீர் மல்க அஞ்சலி

ரயில்வே பொறியாளர்கள் உடனடியாக ரயில் பெட்டியை முழுவதும் சோதனை செய்து டயர் அகற்றி உள்ளனர். மீண்டும் ரயில் எஞ்சின் மற்றும் பெட்டிகள்முழுவதும் பரிசோதனை செய்த பிறகு 40 நிமிட தாமதத்திற்கு பின் ரயில் காரைக்கால் புறப்பட்டது. திருச்சி, தஞ்சை இடையே ரயில் தண்டவாளத்தில் டயர் வைக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

ரூ.15 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட அரசுப் பேருந்து 10 கி.மீ. தூரத்தில் பழுதானதால் பயணிகள் அவதி

காரைக்காலுக்கு  11:40 மணிக்கு வந்து சேர்ந்த பின்னும் ரயில்வே ஊழியர்கள் ரயிலை முழு சோதனை செய்தனர். ரயில் தண்டவாளத்தில் டயர் வைத்து ரயிலை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டப்பட்டதா என ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

vuukle one pixel image
click me!
vuukle one pixel image