10 ஆண்டுகளாக குழந்தை இல்லாத ஏக்கத்தில் 2 மாத குழந்தையை கடத்திச் சென்ற பெண் உள்பட 2 பேர் கைது

By Velmurugan s  |  First Published Jul 7, 2023, 6:37 PM IST

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த மாதம் 28ம் தேதி கடத்தப்பட்ட 2 மாத குழந்தை மீட்கப்பட்ட நிலையில், கடத்தலில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் வீரபிரதாப். இவரது மனைவி சோனியா. இருவரும் இளநீர், பாப்கார்ன், குழந்தைகளுக்கான பொம்மை, பலூன் ஆகியவற்றை வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு 2 1/2 வயதில் அக்ஷயா என்ற பெண் குழந்தையும், 2 1/2 மாதத்தில் ஆதித்யா என்ற ஆண் குழநதையும் உள்ளனர். இருவரும் குழந்தைகளுடன் வியாபாரத்தை முடித்துக்கொண்டு நள்ளிரவில் வீட்டிற்கு செல்வர். சில நேரங்களில் நள்ளிரவை தாண்டிவி்ட்டால், நடைமேடையிலேயே தங்கி விடுவது வழக்கம். 

அதேபோன்று கடந்த 28ம் தேதி  சோனியா  மிஷின் வீதியில் உள்ள ஒரு வாகன வாடகை விடும் கடையின் வாசலில் குழந்தைகளுடன் தூங்கியுள்ளனர். காலை எழுந்து பார்த்தபோது அருகில் படுத்திருந்த குழந்தை ஆதித்யாவை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனை அடுத்து சோனியா பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  அதன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து  தனிப்படை அமைத்து அப்பகுதியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். 

Latest Videos

தேனி வந்தடைந்த டிஐஜி விஜயகுமரின் உடலுக்கு அமைச்சர், டிஜிபி உள்பட அதிகாரிகள் கண்ணீர் மல்க அஞ்சலி

அப்போது அந்தப் பகுதியில் இருந்த ஒரு சிசிடிவியில் வாலிபர் ஒருவர் குழந்தையை தூக்கி செல்வது தெரியவந்தது. இதனையடுத்து அந்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். அதன்படி பெங்களூருவைச் சேர்ந்த புனிதா மற்றும் பசவராஜ், புவனகிரியைச் சேர்ந்த ராஜ கணேஷ் ஆகிய மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கிழக்கு பிரிவு எஸ்.பி சுவாதி சிங் மற்றும் ஆய்வாளர் நாகராஜ் கூறும்போது, பெங்களூருவைச் சேர்ந்தவர் புனிதா என்கிற காயத்ரி. இவருக்கு திருமணமாகி கடத்த 10 ஆண்டுகளாக குழந்தை இல்லை. சமீபத்தில் ஏழு மாத கர்ப்பினியாக இருந்த புனிதாவிற்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு கரு கலைந்துள்ளது. இது தனது மாமியாருக்கு தெரிந்தால் மீண்டும் தம்மை இழிவு படுத்தி பேசுவார் என்ற கருதிய புனிதா கரு கலைந்ததை மாமியாரிடம் கூறாமல் கர்ப்பிணி போன்று நடித்து தான் புதுச்சேரியில் உள்ள ஜிப்பர் மருத்துவமனையில் சேர்ந்து மருத்துவம் பார்க்க செல்வதாக கூறிவிட்டு புதுச்சேரி வந்துள்ளார்.

வளைகாப்பு கொண்டாடிவிட்டு வெளியில் சென்ற கர்ப்பிணி, கணவன் பலி; உறவினர்கள் கதறல்

அப்பொழுது புவனகிரியைச் சேர்ந்த உறவினர் ராஜ கணேஷ் உதவியுடன் கடந்த 10 தினங்களாக புதுச்சேரியின் பல்வேறு இடங்களில்  நோட்டமிட்டு வந்துள்ளார். அப்போதுதான் மிஷின் வீதியில் உள்ள குழந்தையை பார்த்தவுடன் இவர்கள் அந்த குழந்தையை கடத்திச் செல்ல திட்டமிட்டு கடந்த 28ம் தேதி குழந்தையை கடத்தி சென்றுள்ளனர். மேலும் அவர்களிடம் விசாரணை செய்ததில் குழந்தை வேண்டுமென்ற ஆசையில் தான் கடத்திச் சென்றதாக தெரிவித்தாக காவல் துறையினர் கூறினர்.

இதனையடுத்து குழந்தையை மீட்ட பெரிய கடை காவல் துறையினர் அதனை பெற்றோர்களிடம் ஒப்படைத்து குழந்தையை கடத்திய மூன்று பேரை கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

click me!