புதுச்சேரியில் ரூ.15 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட அரசுப் பேருந்தின் சேவையை அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கி வைத்த நிலையில், பேருந்து புறப்பட்ட 10 கி.மீ. தொலைவில் பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகம் சார்பில் புதுச்சேரி நகரப் பகுதி சிரிய பேருந்துகளும் மற்றும் சென்னை, பெங்களூர், திருப்பதி, ஏனாம், திருவண்ணாமலை, திருச்சி, காரைக்கால், விழுப்புரம் ஆகிய வெளிமாநிலங்களுக்கு பெரிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களுக்கு 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. தற்போது பல்வேறு நிர்வாக சீர்கேட்டின் காரணமாகவும் பேருந்துகளை சரியான முறையில் சீர் அமைக்காதன் காரணமாகவும் 15 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே பேருந்துகளை மேம்படுத்தும் பணியில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஆறு பேருந்துகள் கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பேருந்துகளுக்கு பாடி கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக இரண்டு பேருந்துகள் வேலைகளை முடித்து புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை காரைக்கால் மற்றும் சென்னைக்கு என இரண்டு பேருந்துகள் நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா பூஜை செய்து அனுப்பி வைத்தார்.
டிஐஜி விஜயகுமாரின் தற்கொலைக்கு குடும்ப பிரச்சினையோ, பணி சுமையோ காரணம் இல்லை - ஏடிஜிபி விளக்கம்
புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புத்துப்பட்டு என்ற பகுதியில் பழுதாகி நின்றதால் பயணிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகினர். பேருந்தில் பயணித்த பயணிகள் பழுதாகி நின்ற பேருந்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். மேலும் துறை அமைச்சருக்கு 15 லட்ச ரூபாய் செலவு செய்து முதல் முறையாக சென்னைக்கு அனுப்பப்பட்ட பேருந்து புத்துப்பட்டு அருகே நின்றுள்ளதால் பொது மக்களிடையே பெரும் அவப்பெயர்கள் ஏற்படுத்தி உள்ளது என்றும், இதன் காரணமாக அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்து வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.
வளைகாப்பு கொண்டாடிவிட்டு வெளியில் சென்ற கர்ப்பிணி, கணவன் பலி; உறவினர்கள் கதறல்